இந்திய கடன் எல்லை வசதி கீழான பொருள் ஒதுக்கீட்டில் சீராக்கம்

இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் எல்லை வசதியின் கீழான பொருள் ஒதுக்கீட்டில் சீராக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, முன்னதாக கைத்தொழில் மற்றும் மூலப்பொருளுக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கிடப்பட்டிருந்தது.

அது தற்போது, 260 மில்லியன் அமெரிக்க டொலராக சீராக்கம் செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், 300 மில்லியன் அமெரிக்க டொலராக ஒதுக்கிடப்பட்டிருந்த உணவுக்கான ஒதுக்கீடு 180 மில்லியன் அமெரிக்க டொலராகவும், சீராக்கம் செய்யப்பட்டுள்ளது.

மருந்து பொருட்களுக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அதில் எரிவாயுவுக்காக 160 மில்லியன் அமெரிக்க டொலரும், எரிபொருளுக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியும் மேலதிகமாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன.


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!


🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்