நாட்டில் அந்திய செலாவணியை திரட்டிக் கொள்வதில் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள நிலையில் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் அரிசி இறக்குமதிக்காக அரசாங்கத்தினால் 11 பில்லியன் (1,100 கோடி) ரூபாவுக்கும் அதிக தொகை செலவிடப்பட்டுள்ளது.
சுங்க திணைக்களத்தின் தரவுகளுக்கு அமைய 122, 217 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அரிசி இறக்குமதிக்காக 7.5 பில்லியன் ரூபா செலவிடப்பட்டது.
எனினும் இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களுக்குள் மாத்திரம் கடந்த ஆண்டை விடவும் அரிசி இறக்குமதிக்காக அதிக தொகை செலவிடப்பட்டுள்ளது.
இரசாயன பசளை இறக்குமதிக்கான தடையை அடுத்து பெரும்போக விளைச்சல் வீழ்ச்சியடைந்தமையால் அரிசியை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய, ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் அதிகளவான அரிசி இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து மாத்திரம் 117, 471 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் பாகிஸ்தானில் இருந்து 3,490 மெட்ரிக் டன் அரிசியும் மியன்மாரில் இருந்து 1,125 மெட்ரிக் டன் அரிசியும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com