அம்பத்தலை நிரப்பு நிலையத்துக்கு மட்டும் தொடர்ச்சியாக டீசல் வழங்குவது ஏன்?

ஜனாதிபதியின் நெருக்கமான அதிகாரியின் அழுத்தத்தினால் அம்பத்தலை பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு தொடர்ச்சியாக டீசல் வழங்கப்படுவதால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிய வருகிறது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளரின் மனைவிக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு டீசல் விநியோகிக்க வேண்டிய கட்டாயத்துக்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டிலுள்ள அதிகாரிகள் இவ்வாறு நெருக்கடி நிலையிலும் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு முன்னுரிமை வழங்குவது பாரிய அநீதி என கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

புறநகர் பகுதிகளில் தற்போது நிலவும் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் ஜனாதிபதிக்கு நெருக்கமான அதிகாரிகள் இவ்வாறு செயற்படுவது ஜனாதிபதிக்கு மேலும் சங்கடத்தை ஏற்படுத்துமெனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு எட்டு பெரிய டீசல் பௌசர்களை விநியோகிக்க நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் தற்போது மேலும் ஆறு டீசல் பௌசர்கள் எரிபொருள் களஞ்சிய சாலைக்கு வழங்கப்பட உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இச்செய்தியை சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்