லிட்ரோ 12.5 கிலோ சமையல் எரிவாயுவின் விலை இரு மடங்காக அதிகரிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, லிட்ரோ 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 5,175 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்பானது இன்று (22) நள்ளிரவு முதல் அமுலாகவுள்ளது.

முன்னதாக லிட்ரோ 12.5 கிலோ சமையல் எரிவாயுவின் விலை 2675 ரூபாவாக காணப்பட்டது.

இந்நிலையில், தற்போது, அதன் விலை 2,500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய விலைப்பட்டியல்

லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

விலையை அதிகரிப்பதற்காக லிட்ரோ எரிவாயு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

முன்னதாக இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 5,175 ரூபாவாக அதிகரிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், அரசாங்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்