தற்போதைய பொருளாதார பின்னடைவு காரணமாக தேயிலை ஏற்றுமதி பாரிய அளவில் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 வருடங்களுக்கு பின்னர் முதன் முறையாக மிகவும் குறைந்த அளவில் தேயிலை ஏற்றுமதி இடம்பெற்றுள்ளது.
தேயிலை ஏற்றுமதி மூலம் வருடாந்தரம் 1.3 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் அந்நிய செலாவணியாக இலங்கைக்கு கிடைத்து வந்தது.
முன்னதாக கடந்த வருடம் சில ரசாயன உர இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதன் காரணமாக தேயிலை உற்பத்தியும் பாதிப்புக்குள்ளாகியது.
இந்த நிலையில் கடந்த 2021 நொவம்பர் முதல் 2022 பெப்பிரவரி காலப்பகுதியினில் தேயிலை உற்பத்தி 18 சத வீத வீழ்ச்சி பதிவாகியிருந்தது.
இதேபோன்று, கடந்த வருடம் ஜனவரி – மார்ச் மாத காலப்பகுதியினில் 69.8 மில்லியன் கிலோ கிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது.
ஆனால், இந்த வருடம் அதே காலப்பகுதியினில் 63.7 மில்லியன் தேயிலையே ஏற்றுமதி செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





