இலங்கையின் கையிருப்பு தொடர்பில் வெளியான விபரம்

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு, கடந்த ஏப்ரல் மாதத்தில், 1,827 மில்லியன் அமெரிக்க டொலர் என்ற அளவில் பேணப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள, பொருளாதார குறிக்காட்டி அறிக்கையில், இதனை அறியக்கூடியதாக உள்ளது.

கடந்த மார்ச் மாதம், 1,917 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்ட உத்தியோகபூர்வ கையிருப்பு, 90 மில்லியன் அமெரிக்க டொலரால் குறைவடைந்துள்ளது.

வெளிநாட்டு ஒதுக்கம், ஏப்ரல் மாதம் 1,618 மில்லியன் அமெரிக்க டொலர் என்ற நிலையில் பேணப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 1,702 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்ட வெளிநாட்டு ஒதுக்கம், 84 மில்லியன் அமெரிக்க டொலரால் குறைவடைந்துள்ளது.

மார்ச் மாதம் 29 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்ட தங்க கையிருப்பு, அவ்வாறே பேண்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!


🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்