இங்கிலாந்தில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரிப்பு

இங்கிலாந்தில் நுகர்வோர் விலை குறியீட்டின் (CPI) முறையில் கணக்கிடப்படும் சில்லறை பணவீக்கம் மே மாதத்தில் 9.1 சதவீதத்தில் இருந்து ஜூன் மாதம் 9.4 சதவீதமாக உயர்ந்துள்ளது என தேசிய புள்ளிவிபரவியல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த 40 ஆண்டுகளாக இல்லாத புதிய பண வீக்க உயர்வு எனவும் தெரிவித்துள்ளனர்.இதற்கு முதல் 1982ஆம் ஆண்டு பெப்ரவரியில் 9.4 வீதமாக அதிகரித்ததாக தேசிய புள்ளிவிபரவியல் துறை தெரிவித்துள்ளது.

வாகன எரிபொருள், உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் இந்த சில்லறை பண வீக்கத்தின் வீதம் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

மேலும் உக்ரைனில் நடைபெறும் போராலும் கொரோனா கட்டுப்பாடுகளாலும் பல நாடுகளில் பண வீக்கம் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
டளஸை ஏமாற்றி – ரணிலுக்கு வாக்களித்துவிட்டு ஓடியோர் பிடிபட்டனர்

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்