உலகளாவிய நிதி நிறுவனமான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிதி உதவியை அரசாங்கம் என்றென் றும் நிராகரிக்காது. ஆனால் தற்போது இலங்கை தனது கடன் சேவையை வேறு முறையின் கீழ் மறுசீரமைக்க எதிர்பார்க்கிறது என வெகுஜன ஊடக அமைச்சரான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் நெருங்கிய உறவைப் பேணுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
1950 ஆம் ஆண்டு முதல் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை 16 தடவைகள் பெற்றுள்ளது.
சமீப காலங்களில், மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 2016 ஆம் ஆண்டு 1.1 பில்லியன் அமெரிக்க டொலரும் 2008 ஆம் ஆண்டு 2.5 பில்லியன் அமெரிக்க டொலரும் கடனாகப் பெற்றுள்ளோம்.
எதிர்காலத்தில் உதவிக்காக சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவ தற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் எந்த நேரத்திலும் நிராகரிக்கவில்லை.
இலங்கை, சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவி பெறும் உறுப்பு நாடாகும். எனவே, சர்வதேச நிதி நிறுவனம் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை சேதப்படுத்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பற்றி அரசாங்கம் கிட்டத்தட்ட அனைத்து பங்குதாரர்களுடனும் விவாதித்துள்ளதாகவும், இப்போதைக்கு சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல வேண்டாம் என முடிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப இலகுவழி hi2world.com