பொருட்களின் விலைகள் குறைந்தும் எடுத்துச் செல்ல முடியாத நிலை

கிராமப் பகுதிகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நேற்று (25) அகில இலங்கை அத்தியாவசிய உணவு மொத்த சில்லறை வியாபாரிகள் சங்கம் வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோவிடம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக கொழும்பு புறக்கோட்டையிலுள்ள மொத்த வியாபாரிகள் அத்தியாவசிய உணவுப் பொருட்களை பல நாட்களாக எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, புறக்கோட்டையிலுள்ள மொத்த வியாபாரிகளின் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த விலை நேற்று குறைந்திருந்தது.

ரூ.625 ஆக இருந்த ஒரு கிலோ பருப்பின் மொத்த விற்பனை விலை ரூ.460 ஆக குறைந்துள்ளது. ஆனால் கிராமப்புறங்களில் ஒரு கிலோ பருப்பு 600 முதல் 700 ரூபா வரை பல்வேறு விலைகளில் விற்கப்படுகிறது.

புறக்கோட்டையில் ஒரு கிலோ சீனியின் மொத்த விற்பனை விலையும் நேற்று 12 ரூபாவால் குறைந்துள்ளது. ஒரு கிலோ சீனியின் மொத்த விலை 315 ரூபாவாக இருந்த நிலையில் அது 303 ரூபாவாகக் குறைந்துள்ளது.

மேலும், அரிசி விலையும் குறைந்துள்ளது. எரிபொருள் வழங்கினால், புறக்கோட்டையிலுள்ள மொத்த வியாபாரிகளிடம் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்று கிராமப்புறங்களுக்கு விநியோகிக்க முடியும் என அகில இலங்கை அத்தியாவசிய உணவு மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்