எரிபொருள் இறக்குமதிக்கான மாதாந்த செலவு குறைந்துள்ளது

நாட்டில் QR முறைமை மூலம் எரிபொருள் விநியோகிக்கப்படுவதால் எரிபொருள் இறக்குமதிக்கான மாதாந்த செலவு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 230 மில்லியன் டொலர்களாக குறைந்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை மக்களுக்கு ஒதுக்கீட்டு அடிப்படையிலான எரிபொருள் விநியோகத் திட்டத்தை முன்னெடுப்பதால் தேசிய சேமிப்பிற்கும் வழிவகுத்துள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது. தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தில் இதுவரை 6 மில்லியன் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள 93% எரிபொருள் நிரப்பு நிலையங்களில் […]
அரச ஊழியர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும்

தமது கடமைகளை சரியாக செய்யாத அரச ஊழியர்கள் உடனடியாக சேவையை விட்டு வெளியேற வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திச் சபையில் உரையாற்றிய அவர் நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரையும் ஒன்றிணைப்பதே தனது நோக்கமாகும் என குறிப்பிட்டார். மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகள் குறித்து ஆராய்வதற்கும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கும் பொதுத் துறை அதிகாரிகள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி […]
முட்டை விலையை அதிகரித்து விற்கும் நிறுவனங்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம் – ஆறு மாதம் சிறை!

அரசாங்கம் நிர்ணயித்த விலை வரம்புகளுக்கு உட்பட்டு முட்டைகளை விற்பனை செய்யாத அனைத்து வர்த்தகர்களுக்கும் எதிராக வழக்குத் தொடரப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. முட்டைகளை அதிக விலைக்கு விற்றால் குறைந்த பட்ச அபராதம் 1 இலட்சம் ரூபாவும் அதிகபட்ச அபராதம் 5 இலட்சம் ரூபாவும் என மேற்படி அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியெல்ல தெரிவித்தார். ஒரு தனியார் நிறுவனத்துக்கு குறைந்தபட்ச அபராதம் 5 லட்சம் ரூபாவும் அதிகபட்ச அபராதமாக 50 லட்சம் ரூபாவும் […]
நாட்டின் இந்த நெருக்கடி நிலைக்கு நானும் காரணம் – மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாத்திரம் நாட்டின் இந்த நிலைமைக்கு பொறுப்பல்ல, நானும் முந்தைய அரசாங் கம் உட்பட அனைவரும் பதில் சொல்ல வேண்டுமென முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றில் முன்னாள் பிரதமர் மஹிந்த இவ்வாறு தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ செய்ய வேண்டியதை முடித்திருக்க வேண்டும். எவ்வாறாயினும் அவர் ஒரு அரசியல்வாதி அல்ல. நாட்டை விட்டு செல்வதற்கு முன் கோட்டாபய ராஜபக்ஷ என்னிடம் ஆலோசித்திருக்கவில்லை. அவர் சென்றிருக்கக் […]
தப்பியோடவேண்டாம் என கோத்தபாயவிற்கு ஆலோசனை வழங்கியிருப்பேன் – மகிந்த

நான் போகலாமா என கோத்தபாய ராஜபக்ச என்னை கேட்டிருந்தால் வேண்டாம் என்றே சொல்லியிருப்பேன் என முன்னாள் பிரதமர்மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். சண்டே டைம்சிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளர் நான் அரசியலில் தொடர்ந்தும் நீடிப்பேன் பொருத்தமான தருணத்திலேயே ஓய்வு பெறுவேன் அதுவரை நான் போகமாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். பொதுஜனபெரமுனவின் தலைவராக தொடர்ந்தும் நீடிப்பீர்களா என்ற கேள்விக்கு அதனை கட்சியே தீர்மானிக்கவேண்டும் அவ்வாறு இல்லாவிட்டாலும் நான் ஒரு சட்டத்தரணி என்னால் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பணிபுரிய முடியும் […]
முட்டை விற்பதில் சிக்கல்

உச்சபட்ச சில்லறை விலைக்கு, தங்களது உற்பத்திகளை வழங்குவதில், சிக்கல் உள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், முட்டைக்கு உச்சபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து, நுகர்வோர் விவகார அதிகார சபையினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. இதன்படி, வெள்ளை முட்டை ஒன்றின் உச்சபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் உச்சபட்ச சில்லறை விலை 45 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிர்ணய விலையை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை […]
நாட்டை மீட்க ரணிலால் மட்டுமே – மஹிந்த ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாத்திரம் நாட்டின் இந்த நிலைமைக்கு பொறுப்பல்ல, நானும் முந்தைய அரசாங்கம் உட்பட அனைவரும் பதில் சொல்ல வேண்டுமென முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றில் முன்னாள் பிரதமர் மஹிந்த இவ்வாறு தெரிவித்தார். கோட்டாபய ராஜபக்ஷ செய்ய வேண்டியதை முடித்திருக்க வேண்டும். எவ்வாறாயினும் அவர் ஒரு அரசியல்வாதி அல்ல. நாட்டை விட்டு செல்வதற்கு முன் கோட்டாபய ராஜபக்ஷ என்னிடம் ஆலோசித்திருக்கவில்லை. அவர் சென்றிருக்கக் கூடாது. […]