நாட்டை மீட்க ரணிலால் மட்டுமே – மஹிந்த ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாத்திரம் நாட்டின் இந்த நிலைமைக்கு பொறுப்பல்ல, நானும் முந்தைய அரசாங்கம் உட்பட அனைவரும் பதில் சொல்ல வேண்டுமென முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றில் முன்னாள் பிரதமர் மஹிந்த இவ்வாறு தெரிவித்தார். கோட்டாபய ராஜபக்ஷ செய்ய வேண்டியதை முடித்திருக்க வேண்டும். எவ்வாறாயினும் அவர் ஒரு அரசியல்வாதி அல்ல. நாட்டை விட்டு செல்வதற்கு முன் கோட்டாபய ராஜபக்ஷ என்னிடம் ஆலோசித்திருக்கவில்லை. அவர் சென்றிருக்கக் கூடாது. […]
1000 லீற்றர் டீசல் கடத்தியவர் கைது!

சட்டவிரோதமாக கெப் ரக வாகனத்தில் 1000 லீற்றர் டீசலை கொண்டு சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹினிதும காவல்துறை நிலையத்துக்கு அருகிலுள்ள வீதியில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பெலவத்தை பகுதியைச் சேர்ந்த 31 ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
எண்ணெய் சுத்திகரிப்பு மீள ஆரம்பம்!

சுமார் 2 மாதங்களின் பின்னர் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதற்காக ஒரு லட்சம் மெற்றிக் டன் மசகு எண்ணெய் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தமது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். அத்துடன் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மெற்றிக் டன் மசகு எண்ணெய் அடங்கிய இரண்டாவது கப்பல் அடுத்த வாரம் நாட்டை வந்தடையும். குறித்த இரண்டு கப்பல்களில் கொண்டு வரப்பட்ட இந்த மசகு எண்ணெய்யின் ஊடாக […]
IMF நிபந்தனை – அரச பணியாளர்களின் வேதனம் குறைக்கப்படுமா

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் போது அரச பணியாளர்களின் வேதனத்தை குறைப்பதற்கான நிலைமை இல்லை என இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் கலாநிதி சுஜிதா ஜெகஜீவன் தெரிவித்தார். சூரியனின் செய்தி முகாமையாளர் பரமேஸ்வரன் விக்னேஸ்வரனின் நெறியாள்கையில் ஒலிபரப்பான விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் அதனைக் குறிப்பிட்டுள்ளார். தேவையற்ற செலவுகளை குறைப்பதற்கு திட்டம் ஒன்று காணப்பட வேண்டும் என்பதே சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையாக உள்ளதாகவும் இலங்கை […]
தொழிலுக்காக சென்ற சிறுமி நீச்சல் தடாகத்திலிருந்து சடலமாக மீட்பு

மலையகத்தில் இருந்து கம்பஹாவுக்கு தொழிலுக்கு சென்ற சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மஸ்கெலியா – மொக்கா தோட்டத்தை சேர்ந்த 17 வயதான சிறுமி ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கம்பஹா காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். நைவல வீதி – உடுகம்பளை பகுதியிலுள்ள வீட்டுக்கு குறித்த சிறுமி தொழிலுக்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் குறித்த வீட்டிலுள்ள நீச்சல் தடாகத்தில் இருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக கம்பஹா காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர். சடலம் மீதான பிரேத […]
சவூதி பிரஜைகளை குறிவைக்கும் இலங்கை

நாட்டின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்திற்கு அமைய சவூதி அரேபிய சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்ப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘விசிட் ஸ்ரீலங்கா’ என்ற வேலைத்திட்டத்தின் கீழ் சவூதி அரேபிய சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு இலங்கை எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சவூதி அரேபிய பிரஜை ஒருவர் இலங்கையில் தங்கி இருக்கும் காலத்தில் நாளொன்றுக்கு 230 அமெரிக்க டொலர் செலவாகுவதாக தெரிவிக்கப்படுகிறது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக […]
வெட்கமடைந்த இலங்கை, ஏமாற்றமடைந்த இந்தியா, சிரித்த சீனா!

இலங்கையில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீன கடற்படைக் கப்பல் வருகை தந்தமையானது. இலங்கையுடனான புதுடில்லியின் முடிவில்லாத இக்கட்டான நிலையை காட்டுவதாக இந்திய ஊடகம் ஒன்று கூறுகிறது. இதன்மூலம் இந்தியா முன்னர் இலங்கையுடன் மேற்கொண்ட ராஜதந்திரத்தின் ஆபத்துக்களில் இருந்து அதிகம் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை என்பதையும் இது சுட்டிக்காட்டுவதாக ஊடகம் குறிப்பிட்டுள்ளது. சீனாவின் விஞ்ஞான ஆய்வுக் கப்பல் என்று அழைக்கப்படுவது இந்தியாவால் கூறப்படும் உளவுக் கப்பலாக இருக்கலாம். அப்படியிருந்தும், சீனக் கப்பலுக்கு எதிராக இலங்கைக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை பயன்படாது என்பதை […]