அரசாங்கம் நிர்ணயித்த விலை வரம்புகளுக்கு உட்பட்டு முட்டைகளை விற்பனை செய்யாத அனைத்து வர்த்தகர்களுக்கும் எதிராக வழக்குத் தொடரப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
முட்டைகளை அதிக விலைக்கு விற்றால் குறைந்த பட்ச அபராதம் 1 இலட்சம் ரூபாவும் அதிகபட்ச அபராதம் 5 இலட்சம் ரூபாவும் என மேற்படி அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியெல்ல தெரிவித்தார்.
ஒரு தனியார் நிறுவனத்துக்கு குறைந்தபட்ச அபராதம் 5 லட்சம் ரூபாவும் அதிகபட்ச அபராதமாக 50 லட்சம் ரூபாவும் 6 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.
வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச விலை 43 ரூபாவாகவும் சிவப்பு முட்டை ஒன்றின் விலை 45 ரூபாவாகவும் நிர்ணயித்து அரசாங்கம் தற்போது வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 8