தட்டுப்பாடின்றி விநியோகிக்க எரிபொருட்கள் கையிருப்பில்

தட்டுப்பாடின்றி விநியோகம் செய்யக்கூடிய வகையில், டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட அனைத்து எரிபொருள்களும், கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையததின் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து எரிபொருளை உற்பத்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட அனைத்து எரிபொருட்களும் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

அத்துடன், இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருட்களும் கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல எரிபொருள் களஞ்சிய முனையங்களில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எனவே, எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அக்கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்