ஒரு மணிநேரம் மாத்திரமே மின்வெட்டு!

இன்று (28) இரவு ஒரு மணிநேரம் மாத்திரம் மின்வெட்டினை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேவை குறைந்ததாலும், அனல் மின் உற்பத்தி நிலையங்கள் மீண்டும் இயங்குவதாலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அடுத்த வாரம் மின்வெட்டு மேற்கொள்ளப்படும் விதம், கிடைக்கப்பெறும் வளங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின் துண்டிப்பு கால அளவு குறையும் சாத்தியம்!

நாளை ஆரம்பமாகவுள்ள வாரத்தில் நாளாந்த மின்துண்டிப்பு கால அளவை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
திடீரென செயலிழந்த நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின், முதலாம் மின்பிறப்பாக்கி மீள ஆரம்பிக்கப்பட்டு, நேற்று தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது.

இதன்படி, 300 மெகாவொட் மின்சாரம், தேசிய கட்டமைப்புக்கு இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முதலாம் மின்பிறப்பாக்கி செயலிழந்தமை மற்றும் இரண்டாம் மின்பிறப்பாக்கியின் சீரமைப்பு பணிகள் காரணமாக, கடந்த 15ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் 3 மணித்தியால மின்தடை அமுலாக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறான, பின்னணியில், கருத்து வெளியிட்டுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, மின்தடை அமுலாக்கப்படும் காலம் குறித்து அறியப்படுத்துமாறு மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள இலங்கை மின்சார சபை, மின்துண்டிப்பு கால அளவில் திருத்தம் செய்து விரைவில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு அறியப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்