எரிபொருள் நிலையங்களை ஆக்கிரமிக்கப்போகும் வெளிநாடுகள்!

இலங்கையில் பெற்றோலிய வணிகத்தில் ஈடுபடுவதற்கு விருப்பம் அடங்கிய முன்மொழிவுகளை சில வெளிநாட்டு நிறுவனங்கள் சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா, அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து, மலேசியா, நோர்வே மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 24 நிறுவனங்கள் இதற்கான முன்மொழிவுகளை முன்வைத்துள்ளன. எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள குழு, இந்த முன்மொழிவுகளை மதிப்பீடு செய்து, கோரிக்கை விண்ணப்பங்களை முன்வைக்கும் என அமைச்சர் மேலும் […]
யாழ். மாநகர சபைக்கு வழங்கிய நிதியை மீள கோரும் ஜப்பான்

தம்மால் முன்மொழியப்பட்ட சீரமைக்கப்பட்ட நான்கு கழிவு சேகரிப்பு மீள்சுழற்சி பாரவூர்தி உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தாதன் காரணமாக, அதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தை மீள ஒப்படைக்குமாறு ஜப்பானிய தூதரகம் யாழ்ப்பாண மாநகர சபையிடம் கோரியுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரலில் ஜப்பானிய வெளியுறவு அமைச்சகத்தின் இலாப நோக்கற்ற பிரிவான, ஜப்பானிய இராஜதந்திரத்தை மேம்படுத்துவதற்கான சங்கம் (SPJD), ஜப்பானிய உள்ளூராட்சி மன்றங்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட நான்கு கழிவு சேகரிப்பு மீள்சுழற்சி வாகனங்களை வழங்குவதற்காக, யாழ் மாநகர சபையுடன் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டது. அதன்படி, நான்கு […]
புலம்பெயர் தமிழர்களை நெருங்க துடிக்கும் இலங்கை அரசாங்கம்!

புலம்பெயர் தமிழர்களின் தடைகளை நீக்கிய அரசாங்கம் அவர்களுடன் பேச்சுகளை ஆரம்பித்துள்ளது. கொழும்பின் ஊடகம் ஒன்றின் தகவல்படி முதலாவது கலந்துரையாடல் தொலைத் தொடர்பின் ஊடாக இடம்பெற்றுள்ளது. நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவுடன் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின்போது நீதி மற்றும் சமத்துவத்திற்கான கனேடியர்கள் என்ற கனடாவை தளமாகக் கொண்ட புலம்பெயர் அமைப்பு – மற்றும் அவுஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் உட்பட நான்கு நாடுகளில் உள்ள புலம்பெயர் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். கனேடிய அமைப்பு ரோய் சமாதானம் என்பவரால் வழிநடத்தப்பட்டது அவர் நிரபராதியாகி விடுவிக்கப்படுவதற்கு […]
எதிர்வரும் 2 நாட்களில் எரிபொருள் வரிசையை குறைப்பு

நாடளாவிய ரீதியாக இடம்பெறும் எரிபொருள் விநியோகம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தமது ட்விட்டர் கணக்கில் அவர் இதனைப் பதிவிட்டுள்ளார். சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் மேலதிகமாக எரிபொருளை வழங்குமாறு குறித்த கலந்துரையாடலில் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தமது பதிவில் தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட தொய்வு, தரையிறக்குவதில் தாமதம் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பதிவுகளுக்கான கட்டண தாமதம் என்பன காரணமாக எரிபொருளுக்காக நீண்ட வரிசை உருவாகியுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன […]
இலங்கையின் கடன் நெருக்கடியை தீர்க்கும் வகையில் ஜப்பான்!

இலங்கையை மையப்படுத்தி முக்கிய சர்வதேச ராஜதந்திர நகர்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் இலங்கையின் கடன் நெருக்கடியை தீர்க்கும் வகையில் இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளின் கூட்டம் ஒன்றை கூட்டுவதற்கு ஜப்பான் முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது ஜப்பானிய அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாதபோதும் உறுதிப்படுத்தப்பட்ட செய்தியாகவே வெளியாகியுள்ளது. முன்னதாக இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை மையப்படுத்தி கடன் வழங்குனர்களின் மாநாட்டை நடத்துமாறு இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பானை கேட்டிருந்தார். இதற்கமையவே ஜப்பான் குறித்த மாநாட்டை […]
மௌனிக்கப்பட்ட காலிமுகத்திடல்!

இலங்கையில் போராட்டங்களுக்கு பின்னரும் சீர்திருத்தங்களை எதிர்பார்க்கமுடியவில்லை என்று பொதுமக்கள் மத்தியில் கருத்துருவாக்கம் உருவாகியுள்ளதாக வெளிநாட்டு செய்தி இதழ் ஒன்று தெரிவித்துள்ளது. இலங்கையின் தலைநகர் கொழும்பில் கோட்டாபயவை ஓடவைத்த காலிமுகத்திடல் போராட்டக்களம், படையினரால் தகர்க்கப்பட்டமையை அடுத்து இன்று ஆள் நடமாட்டம் அற்ற இடமாக மாறியுள்ளதாக அந்த இதழ் குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில் கோட்டாபயவுக்கு பின்னர் பதவிக்கு வந்துள்ள ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்சர்களின் கூட்டாளியாகவே பார்க்கப்படுகிறார் என்று மக்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக இந்த இதழ் குறிப்பிடுகிறது. தற்போதைய ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக […]
செப்டம்பருக்கு பின் அரிசி விலை கிலோ 290 ரூபாவாக உயரும்

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் ஒரு கிலோ அரிசியை 290 ரூபாவுக்கு விற்பனை செய்ய வேண்டும் என பாரிய ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இளவேனிற் காலத்தில் ஒரு கிலோ நெல் 140 ரூபா தொடக்கம் 150 ரூபா வரையிலான விலைக்கு கொள்வனவு செய்ய வேண்டியிருப்பதனால் ஒரு கிலோ நெல்லின் விலையை விட இரு மடங்காக அரிசியை விற்பனை செய்ய வேண்டியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மின்சாரக் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம் அதிகரிப்பதால் அரிசியின் விலையை உயர்த்த வேண்டிய நிலை […]