சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளப்போகும் கோட்டாபய !

பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டுச் சென்று ஏழு வாரங்களுக்குப் பிறகு நாடு திரும்பியுள்ளார். இப்போது அவருக்கு அரசியலமைப்பு விதிவிலக்கு நீக்கப்பட்டதால்,சமூக ஆர்வலர்கள் வலுக்கட்டாயமாக காணாமல் போனது தொடர்பாக சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார் . கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கொழும்புக்கு வ ந்து, தலைநகரில் உள்ள தனது புதிய வீட்டில் தங்கியுள்ளார் . அவர் ஜனாதிபதியாக அரசியலமைப்பு விலக்கு மூலம் […]

சாரதி அனுமதிப்பத்திரத்தை மாற்றியமைக்கத் தீர்மானம்

மெமரி சிப்கள் கொண்ட சாரதி அனுமதிப்பத்திரங்களை நீக்கும் அதேவேளை QR குறியீடு கொண்ட புதிய அட்டையை அறிமுகப்படுத்த மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான யோசனை சட்ட வரைவு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்தார். இந்நாட்டில் ஏறக்குறைய ஐம்பத்தேழு இலட்சம் பேர் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுள்ளனர். அவர்களின் அடையாளம் மற்றும் ஓட்டக்கூடிய வாகன வகைகள் மற்றும் செல்லுபடியாகும் காலம் சாரதி அனுமதிப் பத்திர சிப்பைப் போன்ற நினைவக […]

யாழ். மக்களுக்கு மின் கட்டண நிலுவை தொடர்பில் விஷேட அறிவிப்பு

யாழ். வடமராட்சி – தென்மராட்சி பகுதிகளில் 5 ஆயிரம் ரூபாவுக்கு மேல் மின் கட்ட ணம் நிலுவையில் வைத்திருப்போரின் மின் இணைப்பு எதிர்வரும் திங்கள் (5) முதல் துண்டிக்கப்படும் என வடமராட்சி – தென்மராட்சி பிரதேசங்களுக்கான மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 5ஆம் திகதி தொடக்கம் 5 ஆயிரம் ரூபாவுக்கு அதிகமான மின் கட்டண நிலுவை வைத்திருப்போர் அவற்றை செலுத்தி விடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் அதனை மீள இணைப்பதற்கு குற்றப் […]

இலங்கைக்காக கடன் சலுகை திட்டத்தை ஆரம்பிக்க Paris Club

இலங்கைக்காக கடன் சலுகை திட்டமொன்றை ஆரம்பிக்க பெரிஸ் கிளப் (Paris Club) அங்கத்தவர்கள் தயாராகி வருகின்றனர். Paris Club அங்கத்தவர் அல்லாத இருதரப்பு கடன் வழங்குனர்களுடன் இணைந்து கலந்துரையாடுவதற்கும் Paris Club அங்கத்தவர்கள் குழு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் எட்டப்பட்டுள்ள 48 மாத காலத்திற்கான நீடித்த நிதி வசதி குறித்த ஊழியர் மட்ட இணக்கப்பாட்டை Paris Club அங்கத்தவர் குழு வரவேற்றுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் […]

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான விண்ணப்பப் படிவம் வெளியீடு

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான விண்ணப்பப் படிவம் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு வெளியீடு இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் உள்ளடங்கிய சுற்றறிக்கையை அமைச்சு அண்மையில் வெளியிட்டிருந்தது. சுற்றறிக்கையின்படி, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒரு மின்சார வாகனம், நான்கு சக்கர வாகனம் அல்லது இரு சக்கர வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி உண்டு. மேலும் இதற்கான அனுமதி 2022 மே மாதம் முதல் டிசம்பர் வரை செல்லுபடியாகும் என தொழில் […]

பாண் இறாத்தல் ஒன்றின் விலை 300 ரூபா!

450 கிராம் பாண் இறாத்தல் ஒன்றை 300 ரூபாவுக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. சந்தையில் கோதுமை மாவை அதிக விலைக்கு கொள்வனவு செய்ய வேண்டி உள்ளமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 50 கிலோ கிராம் கோதுமை மா மூடை ஒன்றின் விலை 20 ஆயிரம் ரூபாவை விடவும் அதிகரித்துள்ளது இதன் […]

நாடு திரும்பியுள்ள கோட்டாபயவை கைதுசெய்யவேண்டும் என வேண்டுகோள்கள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியுள்ள நிலையில் அவரை கைதுசெய்யவேண்டும் என்ற கோரிக்கைகள் வெளியாகியுள்ளன. நாடுகடந்த நிலையில் வாழ்ந்த பின்னர் நாடு திரும்பியுள்ள கோட்டாபய அவரை கைதுசெய்யவேண்டும் என்ற வேண்டுகோள்களை எதிர்கொண்டுள்ளார். அரசாங்கத்திற்கு எதிரான பல மாத ஆர்ப்பாட்டங்களிற்கு பின்னர் பெருமளவு மக்கள் அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் சீற்றத்துடன் நுழைந்ததை தொடர்ந்து இராணுவ பாதுகாப்புடன் நாட்டிலிருந்து கோட்டாபய இராஜபக்ச வெளியேறினார். 73வயதான கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரிலிருந்து தனது இராஜினாமாவை அறிவித்த பின்னர் தாய்லாந்து தலைநகரில் கிட்டத்தட்ட […]