பாண் இறாத்தல் ஒன்றின் விலை 300 ரூபா!

450 கிராம் பாண் இறாத்தல் ஒன்றை 300 ரூபாவுக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

சந்தையில் கோதுமை மாவை அதிக விலைக்கு கொள்வனவு செய்ய வேண்டி உள்ளமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 50 கிலோ கிராம் கோதுமை மா மூடை ஒன்றின் விலை 20 ஆயிரம் ரூபாவை விடவும் அதிகரித்துள்ளது

இதன் காரணமாக சில வெதுப்பகங்களை முன்னெடுத்து செல்ல முடியாமையால் அவற்றை மூடியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பாண் இறாத்தல் ஒன்றை 300 ரூபாவுக்கு விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தையில் தற்போது கோதுமை மாவுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்த சந்தர்ப்த்தை பயன்படுத்தும் கருப்புச் சந்தையில் ஈடுபடுபம் சிலர், 10 ஆயிரம் ரூபா பெறுமதியான கோதுமை மா மூடை ஒன்றை 20 ஆயிரம் ரூபா, 25 ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில் விற்பனை செய்கின்றனர்.

இந்த விலைக்கு கோதுமை மாவை கொள்வனவு செய்தால் பாண் இறாத்தல் ஒன்றை 300 ரூபாவுக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை வெதுப்பக உரிமையாளர்களுக்கு ஏற்படும் என அந்த சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து, அரசாங்கத்தின் அனைத்து தரப்பினருக்கும் அறியப்படுத்தப்படுள்ளது.

ஆனால் கோதுமை மா தட்டுப்பாட்டுக்கு தீர்வில்லை.

இந்த நிலையில் அரசாங்கம் இதில் தலையீடு செய்து ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெதுப்பக உரிமையாளர்கள் சங்க என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்