நாடு திரும்பியுள்ள கோட்டாபயவை கைதுசெய்யவேண்டும் என வேண்டுகோள்கள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியுள்ள நிலையில் அவரை கைதுசெய்யவேண்டும் என்ற கோரிக்கைகள் வெளியாகியுள்ளன.

நாடுகடந்த நிலையில் வாழ்ந்த பின்னர் நாடு திரும்பியுள்ள கோட்டாபய அவரை கைதுசெய்யவேண்டும் என்ற வேண்டுகோள்களை எதிர்கொண்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிரான பல மாத ஆர்ப்பாட்டங்களிற்கு பின்னர் பெருமளவு மக்கள் அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் சீற்றத்துடன் நுழைந்ததை தொடர்ந்து இராணுவ பாதுகாப்புடன் நாட்டிலிருந்து கோட்டாபய இராஜபக்ச வெளியேறினார்.

73வயதான கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரிலிருந்து தனது இராஜினாமாவை அறிவித்த பின்னர் தாய்லாந்து தலைநகரில் கிட்டத்தட்ட வீட்டுக்காவல் என தெரிவிக்கப்படக்கூடிய நிலையில் ஹோட்டலில் வாழ்ந்தார். கோட்டாபய ராஜபக்ச தான் இலங்கைக்கு வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தனக்கு பின்னர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவரை கேட்டுக்கொண்டார்.

ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்துள்ள கோத்தாபாய ராஜபக்ச விடுபாட்டுரிமையை இழந்துள்ளார் அவரை நீதியின் முன்நிறுத்தவேண்டும் என கோட்டாபய ராஜபக்சவை பதவியிலிருந்து அகற்றிய ஆர்ப்பாட்டங்களிற்கு தலைமை வகித்தவர்களில் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோட்டாபயவை ஏற்றுக்கொள்வதற்கு எந்த நாடும் தயாரில்லாத காரணத்தினால்தான் அவர் நாடு திரும்பினார் என தெரிவித்துள்ளஜோசப்ஸ்டாலின் கோட்டாபய மறைந்திருப்பதற்கு எங்கும் இடமில்லை என தெரிவித்துள்ளார்.

22 மில்லியன் மக்களிற்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்தியமைக்காக அவரை கைதுசெய்யவேண்டும்அவரது குற்றங்களிற்காக அவரை விசாரiணை செய்யவேண்டும் என ஜோசப்ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதாரம் முன்னொருபோதும் இல்லாத வீழ்ச்சியை சந்தித்ததை தொடர்ந்து ராஜபக்ச அரசாங்கம் மிகவும் குழப்பமான விதத்தில் பொருளாதாரத்தை தவறாக கையாண்டது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.

பொருளாதார நெருக்கடி காரணமாக உணவுப்பொருட்களிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நீண்டநேர மின்வெட்டுக்களும் எரிபொருள்களிற்கான நீண்ட வரிசைகளும் காணப்பட்டன- இறக்குமதிக்கு செலுத்துவதற்கான டொலர் நாட்டிடம் இல்லாமல்போனதன் காரணமாகவே இந்த நிலையேற்பட்டது.

எதுவும் நடக்கவில்லை என்ற நினைப்பில் அவரால் சுதந்திரமாக வாழமுடியாது என ஜோசப்ஸ்டாலின் தெரிவித்தார்.

கொழும்பின் பிரதான விமானநிலையத்திற்கு வந்துசேர்ந்த கோட்டாபயவை மாலைகள் அணிவித்து சிரேஸ்ட அரசியல்வாதிகளும் அமைச்சர்களும் வரவேற்றனர்.

கோட்டாபயவின் பின்னர் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ரணில்விக்கிரமசிங்க அரசாங்கம் தலைநகரில் வழங்கியுள்ள வீட்டிற்கு பின்னர் கோட்டாபயராஜபக்ச பாதுகாப்பு தொடரணியில் அழைத்து செல்லப்பட்டார்.

கோட்டாபய ராஜபக்சவின் இளைய சகோதரரும் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ச கடந்த மாதம் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை சந்தித்து பதவி கவிழ்க்கப்பட்ட தலைவர் நாடு திரும்புவதற்கான பாதுகாப்பை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

2009 பத்திரிகையாளர் லசந்தவிக்கிரமதுங்க படுகொலை உட்பட பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடு திரும்பும் அவரின் முடிவை வரவேற்கின்றோம் இதன் காரணமாக எங்களால் அவரின் குற்றங்களிற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என இலங்கை இளம் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் தரிந்து ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

சிறப்புச் செய்திகள்