நாடு திரும்பியுள்ள கோட்டாபயவை கைதுசெய்யவேண்டும் என வேண்டுகோள்கள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியுள்ள நிலையில் அவரை கைதுசெய்யவேண்டும் என்ற கோரிக்கைகள் வெளியாகியுள்ளன. நாடுகடந்த நிலையில் வாழ்ந்த பின்னர் நாடு திரும்பியுள்ள கோட்டாபய அவரை கைதுசெய்யவேண்டும் என்ற வேண்டுகோள்களை எதிர்கொண்டுள்ளார். அரசாங்கத்திற்கு எதிரான பல மாத ஆர்ப்பாட்டங்களிற்கு பின்னர் பெருமளவு மக்கள் அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் சீற்றத்துடன் நுழைந்ததை தொடர்ந்து இராணுவ பாதுகாப்புடன் நாட்டிலிருந்து கோட்டாபய இராஜபக்ச வெளியேறினார். 73வயதான கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரிலிருந்து தனது இராஜினாமாவை அறிவித்த பின்னர் தாய்லாந்து தலைநகரில் கிட்டத்தட்ட […]
மின்சாரம், பெற்றோலிய உற்பத்தி, சுகாதாரம் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்

மின்சாரம், பெற்றோலிய உற்பத்தி, எரிபொருள் விநியோகம், சுகாதாரம் போன்றவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு!

சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது. ட்வீட் செய்தி ஒன்றில் இந்த உடன்படிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றுள்ளது. அத்துடன் பொது நிதி மேலாண்மை மற்றும் ஏற்றுமதி தொழில்கள் உட்பட பசுமைப் பொருளாதாரம் ஆகியவற்றில் தொடர்ந்தும் இலங்கையுடன் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை […]
இலங்கையில் அதிகரிக்கப்படும் தொலைபேசி கட்டணங்கள்!

கையடக்க தொலைபேசிகள்,இணைக்கப்பட்ட மற்றும் தொலைக்காட்சி சேவைக்கட்டணங்களை அதிகரிக்க தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி கைப்பேசி, நிலையான இணைப்பு, முற்கொடுப்பனவு, பிற்கொடுப்பனவு கட்டணங்கள் 20 வீதத்தாலும், தொலைபேசி சேவைக்கட்டணம் 25 வீதத்தாலும் செப்டம்பர் 5 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை […]
நித்தியானந்தாவிடம் இருந்து ரணிலுக்கு கடிதம்

இந்திய சாமியார் நித்தியானந்தா இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் எழுதியதாக கூறப்படும் செய்தியில் உண்மையில்லை என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்தியாவில் பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள சாமியார் நித்தியானந்தா இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருப்பதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தமக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும், அதற்காக அடைக்கலம் தருமாறும் அவர் கோரியுள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மருத்துவத்துக்கான அனைத்து செலவுகளையும் தாம் வாழ்ந்து வரும் சொர்க்கப்பூமியான கைலாசம் ஏற்றுக்கொள்ளும் […]
நள்ளிரவில் கோத்தபய ராஜபக்சே நாட்டுக்குள் வந்தடைந்தார்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த ஜூலை மாதம் பாரிய போராட்டங்களைத் தொடர்ந்து வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற நிலையில் நாடு திரும்பியுள்ளார். தற்காலிக விசாவில் தாய்லாந்தில் தங்கியிருந்த ராஜபக்ச, சிங்கப்பூர் வழியாக நாடு திரும்பினார். விமான நிலையத்தில் இலங்கை அமைச்சர்கள் சிலர் அவரைச் சந்தித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. வரலாற்றில் தீவின் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு அவரது அரசாங்கத்தை இலங்கையர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அந்நியச் செலாவணி சரிவு உணவு மற்றும் எரிபொருளுக்கு கடுமையான பற்றாக்குறைக்கு வழிவகுத்தது. உணவு […]
இலங்கையின் வர்த்தக ஏற்றுமதிகள் பெரும் அதிகரிப்பு!

கடந்த ஜுலை மாதம் இலங்கையின் வர்த்தக ஏற்றுமதிகள் பெரும் அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் வர்த்தக ஏற்றுமதிகள் கடந்த ஜுலை மாதம் 2.25 சதவீத அதிகரிப்புடன், 1.28 பில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளது. இதுவே இதுவரையில் பதிவான ஒரு மாதத்தின் அதிகூடிய வர்த்தக ஏற்றுமதியாகும். அத்துடன் இந்த வருடத்தின் முதல் 7 மாதங்களில் மொத்த வர்த்தக ஏற்றுமதி 7.6 பில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் […]