யாழ். மக்களுக்கு மின் கட்டண நிலுவை தொடர்பில் விஷேட அறிவிப்பு

யாழ். வடமராட்சி – தென்மராட்சி பகுதிகளில் 5 ஆயிரம் ரூபாவுக்கு மேல் மின் கட்ட ணம் நிலுவையில் வைத்திருப்போரின் மின் இணைப்பு எதிர்வரும் திங்கள் (5) முதல் துண்டிக்கப்படும் என வடமராட்சி – தென்மராட்சி பிரதேசங்களுக்கான மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 5ஆம் திகதி தொடக்கம் 5 ஆயிரம் ரூபாவுக்கு அதிகமான மின் கட்டண நிலுவை வைத்திருப்போர் அவற்றை செலுத்தி விடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் அதனை மீள இணைப்பதற்கு குற்றப் பணம் 3 ஆயிரம் ரூபா மின் கட்டணத்துக்கு மேலதிகமாக செலுத்த வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்