2023ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரபரீட்சை பெறுபேறுகள் இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை பணிமனை தெரிவித்துள்ளது. அதன்படி உயர்தர பரீட்சைக்கு மொத்தம் 3லட்சத்து 46ஆயிரத்து 976 பேர் தோற்றியிருந்தனர். இவர்களில் 2லட்சத்து81ஆயிரத்து 445 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 65ஆயிரத்து531 தனியார் விண்ணப்பதாரர்களும்தோற்றியிருந்தனர்.
புங்குடுதீவு தென்பெருந்துறை சதானந்த சிவன் ஆலயத்தின் அகழ்வு பணி நிறைவுக்கு வந்தது!

புங்குடுதீவு தென்பெருந்துறை சதானந்த சிவன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில் ஆலய சூழலில் கிடங்கிலிருந்து மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அண்மையில் வெளிவந்தன. அதனடிப்படையில் இன்று காலை நீதிமன்றத்தின் அனுமதியுடன் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் நளினி சுபாகரன் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரி செ.பிரணவன், தொல்லியல் துறை அதிகாரி மணிமாறன் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள், பொலிஸார், தடயவியல் பொலிஸார் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது. அகழ்வின் போது பெண்ணொருவரினுடையதாக கருதப்படும் எலும்புக் கூடு […]
அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ள முன்வாருங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி,ஜே.வி.பி உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு. ஐ.தே.க.யைக் குழிதோண்டிப் புதைக்க சிலர் தயாராக இருந்தாலும், புதைப்பதற்குத் தயாரான பொருளாதாரத்தை மீட்டெடுத்தது ஐக்கிய தேசியக் கட்சிதான். நாட்டில் ஜனநாயகம் பலப்படுத்தப்பட்டுள்ளதால் காலிமுகத்திடலில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவருக்கு செத்தம் வீதியில் மே தினக் கூட்டத்தை நடத்த முடிந்துள்ளது. இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவோம் – ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்கேற்பு. சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை வெற்றியடையச் […]
யாழ். புங்குடுதீவில் ஆரம்பமான மனித எலும்புக்கூடு அகழ்வு பணி!

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு அரசினர் மருத்துவமனையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட இடங்களில் இன்று வியாழக்கிழமை(02) அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை மாவட்ட நீதிபதி நீதிவான் நளினி சுபாகரன் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரி செ.பிரணவன் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் முன்னிலையில் குறித்த அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தில் அரசினர் மருத்துவமனையை அண்மித்த தென்பெருந்துறை சதானந்தசிவன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில் ஆலய சூழலில் […]
மேல் மாகாண யுக்திய நடவடிக்கையில் சிக்கிய 25 பெண்கள்

மேல் மாகாணம், பேலியகொடை பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 25 விபச்சாரிகள் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய பரிசோதனையில் தெரிய வந்துள்ளது . போதைப்பொருள் பாவனைக்காக விபசாரத்தில் ஈடுபடும் பெண்கள் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த பெண்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு , கைது செய்யப்பட்ட 25 பெண்களும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் இவர்களை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது . இவர்கள் கொழும்பு […]
தமிழீழ விடுதலைப்புலிகளின் தடங்களை மீட்டுக்கொண்ட எரிக்சொல்ஹெய்ம்!

நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் இன்று (01) கிளிநொச்சிக்கு தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டார். தான் சமாதான தூதுவராக பணியாற்றிய போது கிளிநொச்சிக்கு பயணம் செய்து விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்திய இடங்களை மீண்டும் ஒரு தடவை பார்த்துவிட்டு செல்வதற்காக கிளிநொச்சிக்கு இன்று சென்றிருந்தார். இவ்வாறாக அவர் பரவிபாஞ்சானில் அமையப்பெற்றிருந்த அரசியல்துறை நடுவப் பணியகம், மற்றும் சமாதான செயலகத்தைப் பார்வையிட்டார். குறித்த […]
கிளிநொச்சியில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மே தின பேரணி 2024

இலங்கை தமிழரசுக் கட்சியின் மே தின பேரணி கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட தொழிற்ச்சங்கங்களுடன் இணைந்து தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளை ஏற்பாடு செய்த மே தினம் மக்களின் எழுச்சி பேரணியோடு நடைபெற்றது. மே தின கூட்டத்துக்கு முன்பு எழுச்சி பேரணி மற்றும் தொழிலாளர்களின் அவலங்களை சித்தரிக்கும் வாகன ஊர்திகளும் கிளிநொச்சி சித்திவிநாயகர் முன்றலில் இருந்து மத்திய கல்லூரி மைதானம் வரை முன்னெடுக்கப்பட்டது.