இந்தியா – இலங்கை இணைப்பு பூர்த்தி

இந்தியா – இலங்கைக்கு இடையில் தரை மார்க்க இணைப்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், அது குறித்து எதிர்வரும் நாட்களில் ஆராயவிருப்பதாகவும் அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மன்னார் மறை மாவட்ட ஆயர் இமானுவேல் பெர்னாண்டோவை மன்னார் ஆயர் இல்லத்தில் இன்றுகாலை சந்தித்தார். இந்தச் சந்திப்புத் தொடர்பில் அரச தலைவர் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில், மன்னார் – பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவை மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி […]

பிரேம்ஜி மனைவி இந்துவின் பின்னணி இதுதானா

நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி திருமணம் செய்து கொண்டுள்ள பெண் குடும்பம் குறித்தும், அவரின் பேக்கிரவுண்ட் குறித்தும் பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார். இசைஞானி இளையராஜாவின் உடன் பிறந்த தம்பி கங்கை அமரனின் இரண்டாவது மகனான பிரேம்ஜி, 45 வயதை எட்டிய பின்னர் ஒரு வழியாக கடந்த வாரம் திருமண பந்தத்தில் இணைந்தார். பிரேம்ஜி, திரையுலகின் வாசமே இல்லாத.. வங்கி ஊழியர் இந்து என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், அந்த பெண் யார் என பலர் தற்போது வரை […]

அடாத்தாக பிடிக்கப்பட்ட காணியில் கனிய மணல் அகழ்வு.

தலைமன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவயன் குடியிருப்பில் அடாத்தாக பிடிக்கப்பட்ட காணியில் கனிய மணல் அகழ்வு இடம் பெற இருந்த நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை 10 மணியளவில் ஒன்று கூடிய அப்பகுதி மக்கள் எதிர்ப்பை வெளியிட்டனர். தலைமன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவயன் குடியிருப்பு பகுதியில் சுமார் 160 ஏக்கர் பனை மரங்களை கொண்ட காணி சட்ட விரோதமாக பிடிக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளது. காணியில் உள்ள பல நூற்றுக்கணக்கான பனை மரங்கள் அழிக்கப்பட்டு, கனிய மணல் அகழ்வு இடம்பெற […]

வடக்கில் இருந்து 40 இலட்சம் பெறுமதியான ஆடுகள், மாடுகள் மீட்பு!

வடக்கில் இருந்து புத்தளம் மற்றும் கொழும்பு நோக்கி இரு வாகனங்களில் கடத்தப்பட்ட 70 ஆடுகள் மற்றும் 18 மாடுகள் ஓமந்தைப் பகுதியில் வைத்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. அவை 40 இலட்சத்துக்கும் மேற்பட்ட பெறுமதியுடையவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமந்தைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இந்தக் கடத்தல் முறியடிக்கப்பட்டதுடன், ஆடுகளும், மாடுகளும் மீட்கப்பட்டுள்ளன. அவற்றைக் கடத்தினர், என்ற சந்தேகத்தில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நடிகர் மர்ம மரணம்!

தெகிடி, மேயாத மான் உள்ளிட்ட பல திரைப் படங்களில் நடித்த, நடிகர் பிரதீப் விஜயன் பூட்டிய வீட்டுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அவரது தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தாகவும், இதனையடுத்து அவரது வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது பிரதீப் விஜயன் உயிரிழந்துள்ளமை தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் அவரது உடலை மீட்ட பொலிஸார் இது இயற்கை மரணமா? அல்லது தற்கொலையா என்பது குறித்து தீவிர விசாரணையை முன்னெடுத்து […]

அனுஷ்காவின் உருக்கமான பதிவு!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் உளவியல் ரீதியாக பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை அனுஷ்கா இந்த கடினமான சூழ்நிலையில், மக்கள் உளவியல் ரீதியான பிரச்சினைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘உங்கள் நண்பர்களின் முகத்தில் முத்தமிடுங்கள். அவர்களை கட்டி அணைத்து நொறுங்கிப் போன இதயங்களை ஒன்று சேருங்கள். சத்தமாக அன்பு செய்யுங்கள். அதிகமாக நம்புங்கள். மகிழ்ச்சியாக வாழுங்கள். உங்களுக்கு நீங்களே நண்பனாக இருங்கள். […]

இரசிகர்களுக்கு ராஷ்மிகாவின் அறிவுரை!

“உங்களுக்கு எந்த விடயம் மகிழ்ச்சியைத் தருகிறதோ அதை செய்யுங்கள்” என நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இரசிகர்களுக்கு அறிவுரை செய்துள்ளார். சமூகவலைத்தளங்களில் இரசிகர்களுடன் அவ்வவ்போது பேசும் அவர் தற்போது ருவிட்டரில் இட்ட பதிவில் மேற்படி கூறியுள்ளார். குறித்த பதிவில், ‘என் தோழி எனக்கு கூறியதை நான் உங்களுக்கு சொல்கிறேன். உங்களுக்கு எந்த விடயம் மகிழ்ச்சியைத் தருகிறதோ அதை செய்யுங்கள். அவை பணம் அல்லது அறிவுதரும் துறைகளாக கூட இருக்கலாம். அதில் உங்கள் மனதை செலுத்துங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.