யாழில் எரிந்த நிலையில் மோட்டார் சைக்கிள்…

யாழ்ப்பாணத்தில் வெற்றுக் காணி ஒன்றில் இருந்து இன்று வியாழக்கிழமை (27) முற்றாக எரிந்த நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. உடுவில் தெற்கு பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் மோட்டார் சைக்கிள் ஒன்று முற்றாக எரிந்த நிலையில் காணப்படுவதாக, சுன்னாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த மோட்டார் சைக்கிளின் இலக்க தகடு என நம்பப்படும் இலக்க தகடு ஒன்று காணியின் பிறிதொரு இடத்தில் […]

இலங்கையின் இன்றைய தங்க விலை.

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று வியாழக்கிழமை (27) 24 கரட் ஒரு கிராம் தங்கம் 24,000 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 191,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், 22 கரட் ஒரு கிராம் தங்கம் 22,200 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 177,200 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சியில் நாய்க்கடிக்கு இலக்கான சிறுமி உயிரிழப்பு

கிளிநொச்சி, குமாரசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த நான்கு வயது சிறுமி ஒருவர் விசர்நாய்க் கடிக்கு இலக்காகி சிகிச்சை பலனின்றி நேற்று புதன்கிழமை (26) உயிரிழந்துள்ளார். சிறுமி விசர்நாய்க் கடிக்கு இலக்கான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

இலங்கை பொது மலசலகூடத்தில் இரு சடலங்கள் மீட்பு.

நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்தில் உள்ள பொது மலசலகூடத்தில் இருந்து இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று புதன்கிழமை (26) இரவு நுவரெலியா பிளாக்பூல் ருவன்எலியாவைச் சேர்ந்த 71 வயதுடைய முதியவர் ஒருவரின் சடலமும், இன்று வியாழக்கிழமை (27) ஆரியபுர பொகவந்தலாவையைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மலசல கூடத்தில் இருவர் விழுந்து கிடந்ததை அவதானித்த பொதுமக்கள் 1990 அவசர நோயாளர் காவு வண்டி சேவைக்கு தெரிவித்து சம்பவ இடத்திற்கு வந்தவர்கள் குறித்த […]

தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது உறுதி!

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் உயர்பீட கூட்டத்திலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளதாவது” இதுவரை காலமும் கொள்கை ரீதியாக பொது வேட்பாளர் ஒருவரை தமிழர் தரப்பில் நிறுத்துவது என்று இருந்த விடயம் இன்றைய தினம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பொது […]

காந்தக் குரலோன் அப்துல் ஹமீட் அவர்களை முகநூலில் சாகடிக்கும் முயற்சியில் இழிபிறவிகள்.

காந்தக் குரலோன் அப்துல் ஹமீட் அவர்களை முகநூலில் சாகடிக்கும் முயற்சியில் இழிபிறவிகள். முகநூல் நிர்வாகம் இதை அனுமதிப்பது எப்படியோ? சிரித்தபடி வீட்டில் நண்பர்களோடு [ முகநூல் நண்பர் A M Thaj Thajune பதிவில்] இன்று அமர்ந்திருக்கும் புகைப்படமும், நண்பன் கந்தர்வக் குரலோன் இளையதம்பி தயானந்தாவின் ” அவரோடு நான் பேசினேன் நன்றாகவுள்ளார்” என்ற தகவலுமே என் மனதை ஆற்றுப்படுத்தியது. அவரது குரலுக்கு மரணம் இல்லை என்பது எத்தனை உண்மையோ இனி அவரது ஆயுளுக்கும் குறையில்லை என்பதே […]

ராதிக்கவால் பாக்யாவிற்கு ஏற்பட்ட தலைவலி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், எதிர்பாராத விதமாக ராதிகா கால் தடுக்கி கீழே விழுந்து விடுகிறார். ஆனால் இதற்கு ஈஸ்வரி தான் காரணம். அவர்தான் என்னை கீழே தள்ளி விட்டார் என்று ராதிகா, கோபியிடம் சொல்லிவிடுகிறார். கோபிக்கும் ராதிகா வயிற்றில் இருந்த குழந்தை கலைந்து விட்டதால் கோபத்துடன் அம்மாவிடம் பேசுகிறார். இப்போ உனக்கு சந்தோஷமா? நீ நினைச்ச மாதிரி ராதிகா வயிற்றில் இருந்த குழந்தையே இல்லாம ஆக்கிட்ட என்று விரோதியிடம் பேசுவது போல் வார்த்தையாலே […]