ராதிக்கவால் பாக்யாவிற்கு ஏற்பட்ட தலைவலி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், எதிர்பாராத விதமாக ராதிகா கால் தடுக்கி கீழே விழுந்து விடுகிறார். ஆனால் இதற்கு ஈஸ்வரி தான் காரணம். அவர்தான் என்னை கீழே தள்ளி விட்டார் என்று ராதிகா, கோபியிடம் சொல்லிவிடுகிறார். கோபிக்கும் ராதிகா வயிற்றில் இருந்த குழந்தை கலைந்து விட்டதால் கோபத்துடன் அம்மாவிடம் பேசுகிறார்.

இப்போ உனக்கு சந்தோஷமா? நீ நினைச்ச மாதிரி ராதிகா வயிற்றில் இருந்த குழந்தையே இல்லாம ஆக்கிட்ட என்று விரோதியிடம் பேசுவது போல் வார்த்தையாலே பேசி ஈஸ்வரியை காயப்படுத்தி விட்டார். இதனால் இரவு முழுவதும் கோபி சொன்னதையே நினைத்து ஈஸ்வரி தனியாக புலம்பிக்கொண்டார்.

கோபியிடம் ஈஸ்வரியை கோர்த்துவிட்ட ராதிகா
பிறகு விடிந்ததும் பாக்யாவை பார்த்து பேசலாம் என்று பாக்யா வீட்டு வாசலில் போய் நிற்கிறார். பாக்யா, மாமியாரை பார்த்ததும் என்ன அத்தை என்னாச்சு ஏன் இப்படி நிற்கிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு ராதிகா வயிற்றில் இருந்த குழந்தை களைந்து விட்டது. அதற்கு காரணம் நான் தான் என்று அனைவரும் நினைக்கிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் கோபியும் அப்படித்தான் நினைத்து என்னிடம் கேட்கிறான். நான் அப்படியெல்லாம் செய்வனா சொல்லு என்று பாக்கியவிடம் கேட்கிறார். நான் குழந்தை வேண்டாம் என்று சொன்னதற்கு இந்த வயசுல குழந்தை பெற்றெடுத்தால் உடம்புக்கு ஆகாது. அதனால் பின்னாடி ஏதாவது பிரச்சினை வரும் என்ற எண்ணத்தில் தான் நான் அப்படி சொன்னேன்.

ஆனால் இதை புரிந்து கொள்ளாமல் தற்போது ராதிகாவிற்கு ஏற்பட்ட விபத்துக்கு நான் தான் காரணம் என்று எல்லோரும் தவறாக பேசுகிறார்கள் என்று புலம்புகிறார். உடனே பாக்யா நீங்க எந்த தவறும் செய்திருக்க மாட்டீர்கள் எனக்கு தெரியும் அத்தை. எதுவாக இருந்தாலும் உள்ள போய் பேசலாம் என்று ஈஸ்வரியை கூப்பிடுகிறார்.

உடனே ஈஸ்வரி நான் வரவில்லை, நான் இப்பொழுது உன்னை பார்த்து பேசி சொன்னதை நீ யாரிடமும் சொல்ல வேண்டாம். நான் போகிறேன் என்று சொல்லி புலம்பிக் கொண்டே போகிறார். போகும் பொழுது நான் எதுவும் பண்ணவில்லை, ராதிகா இந்த நிலைமையில் இருப்பதற்கு நான் காரணம் இல்லை என்று ஒரு பைத்தியம் போல் புலம்பி கொண்டே போகிறார்.

இது என்ன ஈஸ்வரிக்கு வந்த சோதனையா என்று சொல்வதற்கு ஏற்ப ஈஸ்வரியை இந்த ஒரு நிலைமையில் பார்ப்பதற்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் இதுதான் சான்ஸ் என்று ராதிகாவின் அம்மாவும் ராதிகாவும் சேர்ந்து ஈஸ்வரி மீது பழியை போட்டது செஞ்ச பாவத்துக்கு எல்லாம் தண்டனையாக தான் தெரிகிறது. இதையெல்லாம் தாண்டி மாமியாரை பழையபடி பார்க்க வேண்டும் என்று பாக்யா யோசித்துக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் அனைத்து பிரச்சினைகளையும் தன் தலையில் தூக்கி போட்டு மாமியார் மீது எந்த தவறும் இல்லை என்று நிரூபித்து காட்டப் போகிறார். ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் கோபியின் உண்மையான குணம் என்றும் அவர் எந்த அளவுக்கு ஒரு சுயநலவாதி என்பதையும் ஈஸ்வரி புரிந்து கொள்ள இதுதான் ஒரு சான்ஸாக இருக்கிறது.

சிறப்புச் செய்திகள்