இலங்கை தங்காலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு!

கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை, மதுபானம் எனக் கருதி அருந்திய சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளதுடன் மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது. இதேவேளை, மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மேலும் இரண்டு மீனவர்களும் சிங்கப்பூர் வணிகக் கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார். தங்காலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற டெவோன் 5 என்ற மீன்பிடிப் படகின் மீனவர்களேஇந்த அவலநிலையை எதிர்கொண்டதாக […]

திருகோணமலையில் காணாமற்போன சுற்றுலாப் பயணி கண்டுபிடிக்கப்பட்டார்!

திருகோணமலையில் காணாமற் போனநிலையில் தேடப்பட்டு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணியான பெண்ணொருவர் நேற்று மாலை மயங்கிய நிலையில் சல்லி பகுதியில் அமைந்துள்ள கோவிலுக்கு அருகில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். இஸ்ரேல் நாட்டிலிருந்து திருகோணமலைக்கு வருகை தந்த 25 வயதான குறித்த சுற்றுலாப் பயணி,கடந்த 26ஆம் திகதி மர்மமான முறையில் காணாமற் போனதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலையீட்டில், அவரைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், மூன்று நாட்களுக்கு பின்னர் சல்லி பகுதியில் […]

யாழில் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள்: சபாநாயகருக்கு சிறிதரன் கடிதம்!

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களுடன் ஈடுபடுகின்றவர்கள், சுதந்திரமாக நடமாடுவதாகவும் அதனை கட்டுப்படுத்தாமல், பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினர் அசமந்த போக்குடன் செயற்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார். கொடிகாமத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” யாழ்ப்பாணம் இந்து கல்லுாரிக்கு அருகில் உள்ள எனது இல்லத்திற்கு முன்பாக 4 மோட்டார் சைக்கிள்களில் இனந்தெரியாத 9 பேர், முகத்தையும் மோட்டார் சைக்கிளின் இலக்கத்தகட்டையும் கறுப்பு துணிகளால் மறைத்தவாறு, வாள்களை […]

உலகின் மிகவும் தேடப்படும் பெண்… ரூ 42 கோடி பரிசு அறிவிப்பு

உலகின் மிகவும் தேடப்படும் பெண் என கருதப்படும் மாயமான கிரிப்டோ ராணியை கைது செய்ய உறுதியான தகவல் அளிப்பவர்களுக்கு ரூ 42 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மானிய குடியுரிமை கொண்ட பல்கேரியாவில் பிறந்த Ruja Ignatova என்பவரே உலகின் மிகவும் தேடப்படும் பெண் என அறியப்படுகிறார். இவர் இதுவரை அறியப்பட்ட மிகப்பெரிய கிரிப்டோகரன்சி மோசடிகளில் ஒன்றின் முதன்மை குற்றவாளி என்றே குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். 2014ல் OneCoin என்ற போலியான கிரிப்டோ ஒன்றை அறிமுகம் செய்து, அதனூடாக முதலீட்டாளர்களின் 4 […]

தமிழ்நாட்டிற்கு தற்போது நல்ல தலைவர்கள் தேவை, விஜய்!

தமிழ்நாட்டிற்கு தற்போது நல்ல தலைவர்கள் தேவை என்பதுடன், அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், துறை ரீதியாகவும் நல்ல தலைவர்களே தேவை என ‘தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் முதலிடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வில் அவர் இதனை தெரிவித்தார் இதில் கோவை, ஈரோடு, மதுரை உள்ளிட்ட 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை […]

ராமர் பாலத்தின் செயற்கைக்கோள் புகைப்படத்தை வௌியிட்ட ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிலையம்

தமிழகத்தின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையிலான ஆழமற்ற கடற்பரப்பின் செயற்கைக்கோள் புகைப்படத்தை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிலையம் வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிலையம் 1975 ஆம் ஆண்டு விண்வெளி ஆய்விற்காக நிறுவப்பட்ட அமைப்பாகும். இதன் தலைமையகம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ளது. இதில் 22 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தனது X பக்கத்தில் copernicus sentinel – 2 என்ற தனது செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட தமிழகத்தின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் […]

ஹிருணிக்காவிற்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜாவினால் இன்று(28) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொடையிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் தொழில் புரிந்த அமில பிரியங்க அமரசிங்க எனும் இளைஞர் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் திகதி ஹிருணிக்கா பிரேமச்சந்திரவின் பிரத்தியேக பாதுகாவலர்களுக்கு சொந்தமான டிபென்டரை பயன்படுத்தி கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் அவரது […]