திருகோணமலையில் காணாமற்போன சுற்றுலாப் பயணி கண்டுபிடிக்கப்பட்டார்!

திருகோணமலையில் காணாமற் போனநிலையில் தேடப்பட்டு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணியான பெண்ணொருவர் நேற்று மாலை மயங்கிய நிலையில் சல்லி பகுதியில் அமைந்துள்ள கோவிலுக்கு அருகில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

இஸ்ரேல் நாட்டிலிருந்து திருகோணமலைக்கு வருகை தந்த 25 வயதான குறித்த சுற்றுலாப் பயணி,கடந்த 26ஆம் திகதி மர்மமான முறையில் காணாமற் போனதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலையீட்டில், அவரைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், மூன்று நாட்களுக்கு பின்னர் சல்லி பகுதியில் அமைந்துள்ள கோவிலுக்கு அருகில் மயங்கிய நிலையில் அவர் மீட்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பெண் தற்போது மருத்துவப் பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும், மருத்துவ பரிசோதனையின் பின்னர், அவரை இஸ்ரேல் தூதரகத்தில் ஒப்படைக்குமாறு ஆளுநரால் கிழக்கு மாகாண சுற்றுலா பணியத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்புச் செய்திகள்