ஒரே ஆண்டில் ரூ 170 கோடி நன்கொடை அளித்த பெண்மணி.

இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களாக அறியப்படும் முகேஷ் அம்பானி மற்றும் கெளதம் அதானி ஆகியோர் செய்யாததை பெண் ஒருவர் செய்துள்ளார். 2023ல் அதிக நன்கொடை அளித்துள்ள பெண்களின் பட்டியலில், இந்தியா வரிசையில் ரோகினி நிலேகனி முதலிடத்திற்கு வந்துள்ளார். பொதுவாக ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவராக இருக்கும் நீதா அம்பானி அல்லது அதானி அறக்கட்டளையின் தலைவர் பிரீதி அதானி ஆகியோரே அதிக நன்கொடை அளிப்பவர்கள் என மக்கள் நம்பி வரும் காலகட்டத்தில், 2023ல் ரோகினி நிலேகனி மொத்தமாக ரூ 170 கோடி […]

கண்ணீர் விட்டு கதறிய ரொனால்டோ

ஸ்லோவேனியா அணியுடன் கூடுதல் நேர பெனால்டியை தவறவிட்டதால் ரொனால்டோ கண்ணீர் விட்டு கதறிய சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜேர்மனியில் யூரோ கிண்ணம் போட்டிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், காலிறுதிக்கு தகுதிபெறும் பொருட்டு, கடைசி 8 அணிகள் கடும் போராட்டத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், ஸ்லோவேனியா அணிக்கு எதிராக கூடுதல் நேரத்தில் அனுமதிக்கப்பட்ட பெனால்டியை ரொனால்டோ தவறவிட்டுள்ளார். ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் ஏதுமின்றி சமனில் முடித்துக்கொள்ள, கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இதில் போர்த்துகல் […]

ஒரு தேங்காயும் ஒரு ரூபாயும் போதும்! மாப்பிள்ளை சொல்லும் வியப்பான காரணம்

வேண்டாம் எனவும், தேங்காயும் ஒரு ரூபாயும் போதும் என கேட்டிருப்பது ஆச்சரியமடைய வைத்துள்ளது. பல இடங்களில் நாம் வரதட்சணை கொடுமையை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதிலும் குறிப்பாக கேரள மாநிலத்தில் வரதட்சணை பற்றிய செய்திகள் அதிகம் வலம் வருகின்றது. ஆனால், இங்கு ஒரு மணமகன் ஒருவர் தனக்கு வரதட்சணை வேண்டாம் என்று மணமகள் வீட்டாரிடம் கூறியுள்ளார். இந்திய மாநிலமான ராஜஸ்தான், சிகார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெய் நாராயண் ஜாகர். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அனிதா வர்மாவுக்கும் திருமணம் […]

இரா.சம்பந்தன் காலமானார்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழக்கும் போது அவருக்கு வயது 91 ஆகும். இந்நிலையில், அவரின் மறைவையொட்டி பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இலங்கை தங்காலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு!

கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை, மதுபானம் எனக் கருதி அருந்திய சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளதுடன் மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது. இதேவேளை, மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மேலும் இரண்டு மீனவர்களும் சிங்கப்பூர் வணிகக் கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார். தங்காலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற டெவோன் 5 என்ற மீன்பிடிப் படகின் மீனவர்களேஇந்த அவலநிலையை எதிர்கொண்டதாக […]

திருகோணமலையில் காணாமற்போன சுற்றுலாப் பயணி கண்டுபிடிக்கப்பட்டார்!

திருகோணமலையில் காணாமற் போனநிலையில் தேடப்பட்டு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணியான பெண்ணொருவர் நேற்று மாலை மயங்கிய நிலையில் சல்லி பகுதியில் அமைந்துள்ள கோவிலுக்கு அருகில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். இஸ்ரேல் நாட்டிலிருந்து திருகோணமலைக்கு வருகை தந்த 25 வயதான குறித்த சுற்றுலாப் பயணி,கடந்த 26ஆம் திகதி மர்மமான முறையில் காணாமற் போனதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலையீட்டில், அவரைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், மூன்று நாட்களுக்கு பின்னர் சல்லி பகுதியில் […]