வரியை 13 அல்லது 14 வீதமாக அதிகரிக்க வேண்டும்

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளமையினால் நாட்டின் விற்பனை வரியை அதிகரிப்பதைத் தவிர வேறு வழி இல்லை என நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். பி.பி.சி ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே நிதியமைச்சர் அலி சப்ரி இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டில் பெறுமதி சேர் வரியை 8 வீதமாகக் குறைத்தமை அரசாங்கம் மேற்கொண்ட முக்கிய தவறாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய பெறுமதி சேர் வரியை 13 அல்லது 14 வீதமாக அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் […]
கடனை ரூபாய் பத்திரங்களிலும் பணத்திலும் திருப்பிச் செலுத்துவது குறித்து இலங்கை பரிசீலிக்கலாம்

இடைநிறுத்தப்பட்ட கடனை ரூபாய் பத்திரங்களிலும் பணத்திலும் திருப்பிச் செலுத்துவது குறித்து இலங்கை பரிசீலிக்கலாம்: சிபி ஆளுநர் இடைக்காலக் கொள்கையின் கீழ் இடைநிறுத்தப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு விண்ணப்பிக்கக்கூடிய இலங்கையின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடனாளிகளுக்கு மாற்றாக பத்திரங்களில் செலுத்த முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் கடன் இடைநிறுத்தக் கொள்கையின் கீழ், மறுசீரமைப்பு ஏற்பாடு இறுதி செய்யப்படும் வரை வட்டி மற்றும் அடிப்படைக் கொடுப்பனவுகள் பொருந்தக்கூடிய வட்டி விகிதத்தில் மூலதனமாக்கப்படும். கேட்பவர்களுக்கு […]
நாட்டிற்கு எரிபொருள் ஏற்றிவரும் கப்பல்களிடமிருந்து கொமிசன் அறவிடும் நடைமுறை

நாட்டிற்கு எரிபொருள் ஏற்றிவரும் கப்பல்களிடமிருந்து கொமிசன் அறவிடும் நடைமுறை காணப்பப்படுவதாக எச்சரித்துள்ள தொழிற்சங்க பிரதிநிதியொருவர் இதன் காரணமாக நாட்டில் மோசமான எரிபொருள் நெருக்கடி ஏற்படலாம் என தெரிவித்துள்ளார். 19ம் திகதிக்கு பின்னர் இலங்கைக்கு கப்பல் மூலம் எரிபொருள் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள ஆனந்த பாலித பொதுமக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்கின்ற ஒரு சூழலில் அதிகாரிகள் கொமிசன் பெற முயல்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை எரிபொருள் பௌசர்களின் சாரதிகளின் பணிபுறக்கணிப்பு காரணமாக எரிபொருள் தட்டு;ப்பாடு ஏற்படும் எனவும் […]
எரிபொருள் விநியோகம் தொடர்பில் புதிய வழிகாட்டி

எரிபொருள் விநியோகம் தொடர்பான புதிய வழிக்காட்டியொன்று வெளியிடப்பட்டுள்ளது. வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது ட்விட்டர் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடருந்து ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் 40 சதவீத எரிபொருள் விநியோகத்தை அதிகரிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் எரிபொருள் விநியோகத்துக்கான போக்குவரத்து செலவை குறைத்துக் கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார். அத்தோடு எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் எரிபொருள் விநியோகத்திற்கு சமுகமளிக்காத சகல விநியோகத்தர்களின் அனுமதிபத்திரங்களையும் இரத்து செய்வதோடு சேவைக்கு சமுகமளிப்பவர்களை தடுப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் […]
எதிர் காலத்தில் உணவு விநியோக நடவடிக்கைகள் பாதிப்படைவதற்கான வாய்ப்பு

நாடளாவிய ரீதியாக எதிர் காலத்தில் உணவு விநியோக நடவடிக்கைகள் பாதிப்படைவதற்கான வாய்ப்பு உள்ளதாக தேசிய விவசாய வணிக சபை எச்சரித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக சபையினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரபூர்வமான அதிகாரிகளுடன் பல சந்திப்புகள் இடம்பெற்ற போதிலும் உறுதியான தீர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை என தேசிய விவசாய வணிக சபை அறிவித்துள்ளது. மார்ச் மற்றும் ஏப்பிரல் மாதங்களில் பெரும்போகமும், ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் யால காலப்பகுதியினிலேயே அறுவடைகள் இடம்பெறுகின்றன. எதிர்வரும் […]
இலங்கை, ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெய்

யுக்ரைனுடனான மோதல் காரணமாக சர்வதேச தடைகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும் ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெய்யை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக் தொடர்பில் இலங்கை அவதானம் செலுத்தியுள்ளது. வெளிநாட்டு கையிருப்பில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் குறைந்த விலையில் மசகு எண்ணெய்யை பெற்றுக் கொள்வதன் மூலம் செலவை குறைக்க முடியும் என நம்பப்படுகிறது. இது குறித்து இலங்கை கனியவள கூட்டுதாபனம் முன்வைத்துள்ள யோசனை தொடர்பில் திறைசேரி அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அமெரிக்காவின் பொருளாதார தடைக்குள்ளாகியுள்ள ரஷ்யாவுடன் வர்த்தக ரீதியான […]
உக்ரைனுக்கு எதிரான நடவடிக்கை: உணவு பஞ்சம் ஏற்படும் வாய்ப்பு

ரஷ்யாவின் இந்த நடவடிக்கையினால் உக்ரைன் நாடே உருக்குலைத்துள்ளது. அங்கிருந்து 44 லட்சம் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறி உள்ளனர். உள்நாட்டிலேயே 65 லட்சம் பேர் சொந்த ஊர்களை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர். இந்த இந்த நடவடிக்கையினால் ரஷ்யா மீது உலக நாடுகள் பல பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ரஷ்யாவிடமிருந்து பல நாடுகள் வர்த்தக உறவை துண்டித்துள்ளன. இத்தகைய பொருளாதார தடையால், ரஷ்யாவுக்கு பாதிப்பு ஏற்பட்டதோ என்பதிலும் பார்க்க, உக்ரைன் போரால் ஒட்டுமொத்த உலகமே பாதிக்கப்பட்டிருப்பதுதான் உண்மை. […]