மூலப்பொருட்களின் விலையை காட்சிப்படுத்தி வடை விற்பனை

நுவரெலியா பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் வர்த்தகர் ஒருவர் வடையின் விலையை காட்சிப்படுத்தாமல் வடை தயாரிக்கும் மூலப்பொருட்களின் விலையை காட்சிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், கடந்த ஆட்சியில் (2019) விற்பனையான விலையையும் தற்போதைய ஆட்சியில் விற்பனையாகும் (2022) விலையையும் காட்சிப்படுத்தி வடை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். பொருட்களின் விலையேற்றத்தால் தாம் வடையின் விலையை அதிகரித்துள்ளதாகவும், வடை விலை அதிகரிப்பு தொடர்பில் நுகர்வோர்கள் வினவியதால், வடை தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலையை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வர்த்தகர் தெரிவித்துள்ளார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 […]

இரும்பை கொள்வனவு செய்யும் இலங்கை அரசாங்கம்

இந்தியா, இலங்கைக்கு உணவு உட்பட அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்ய வழங்கி ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை பயன்படுத்தி, இந்தியாவில் இருந்து இரும்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியா வழங்கிய இந்த கடனுதவியில் ஏற்கனவே 250 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதுடன் மீதமுள்ள 750 மில்லியன் டொலர்களில் இரும்பு மற்றும் உருக்கு ஆகியவற்றை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சந்தையில் அத்தியவசிய உணவுப் பொருட்கள், சமையல் எரிவாயு, எரிபொருள் உள்ளிட்டவற்றுக்கு பெரும் தட்டுப்பாடு […]

மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு! நீண்ட வரிசையில் மக்கள்!

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விநியோகம் இல்லாமை காரணமாக நாடு முழுவதிலும் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. எரிபொருள் கிடைக்காததால் பல எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி(பெளசர்) உரிமையாளர்கள் சங்கம் சனிக்கிழமை முதல் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளது. இதனையடுத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவாக லங்கா இந்தியன் எரிபொருள் நிறுவன தாங்கி ஊர்தி( பௌசர்) உரிமையாளர்கள் சங்கமும் நேற்று நள்ளிரவு முதல் […]

அங்காடி விற்பனை நிலையங்களிலும் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி

லங்கா சதொச நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொகையை இலங்கையின் அனைத்து பல்பொருள் அங்காடி விற்பனை நிலையங்களுக்கும் விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அத்தியாவசிய பொருளான அரிசி தொடர்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கும், பல்பொருள் அங்காடிகள் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்றைய தினம் கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அதன்படி அடுத்த வாரம் முதல் பல்பொருள் […]

பொருளாதார வளர்ச்சி மதிப்பிடப்பட்டதை விட வீழ்ச்சியடையும் நிலை

ஆசிய மற்றும் பசுபிக் வலயங்களில் பொருளாதார வளர்ச்சி முன்னர் மதிப்பிடப்பட்டதை விடவும் வீழ்ச்சியடையும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. யுக்ரைன் போர், கொவிட்-19 பரவல் மற்றும் இறுக்கமான நிதிநிலைமைகள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, பிராந்தியங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.9 சதவீதமாக அதிகரிக்கின்ற போதிலும் இது முன்னர் மதிப்பிடப்பட்டமையை விடவும் 0.5 சதவீதம் வீழ்ச்சியானது என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் சில நாடுகளின் பணவீக்கம் அதிகரிக்கும் […]

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறு

தொடருந்து, அரச முகவர் எரிபொருள் தாங்கிகள் மூலம் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் துரிதகதியில் இடம்பெறுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்துடன், சில தனியார் எரிபொருள் தாங்கி சாரதிகள் விநியோக பணிகளுக்கு இடையூறு விளைவிப்பதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் துரிதகதியில் இடம்பெறும் எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்படுவதாக அமைச்சர் ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். இதேவேளை, தற்போது கிராமப்புறங்களுக்கு தொடருந்துகளில் கொண்டு செல்லப்படும் எரிபொருளின் அளவை அதிகரிக்கவும், டிப்போக்களுக்குத் தேவையான எரிபொருளை மட்டும் […]

IMF உடனான அதிகாரிகள் மட்டப் பேச்சுவார்த்தை

சர்வதேச நாணய நிதியத்துடனான அதிகாரிகள் மட்டப் பேச்சுவார்த்தை இந்த வாரத்துக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளது. 2 மாதங்களுக்கு அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தையில் முதற்கட்ட இணக்கப்பாடு எட்டப்படும் என நிதியமைச்சர் அலி சப்ரி எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். இந்த கலந்துரையாடல்களுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கை வரவுள்ளது. அத்துடன் சில கலந்துரையாடல்கள் இணையம் ஊடாகவும் இடம்பெறவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் இரண்டு மாதங்களுக்குள் வெற்றியளிக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க அண்மையில் நம்பிக்கை வெளியிட்டிருந்தமை […]