சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

தனியார் எரிபொருள் தாங்கி ஊர்தி சாரதிகள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது. கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவருடனான சந்திப்பில் ஏற்பட்ட இணக்கப்பாட்டை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தனியார் எரிபொருள் தாங்கி ஊர்தி சாரதிகள் சங்கத்தின் தலைவர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து போக்குவரத்து கட்டணத்தை 40 சதவீதத்தால் அதிகரிக்குமாறு கோரி தனியார் எரிபொருள் தாங்கி ஊர்தி சாரதிகள் நேற்று முன்தினம் முதல் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்திருந்தனர். தங்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் […]

எரிபொருள் தரம் தொடர்பான சிக்கல்களை அறிவிக்க

எரிபொருளின் தரம் தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் அதனை அறிவிப்பதற்காக இரண்டு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, குறித்த விடயங்கள் தொடர்பான தகவல்களை 0115234234 அல்லது 0115455130 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறியப்படுத்த முடியும் என தெரிவித்தார். அதேசமயம் பல பிரதேசங்களில் எரிபொருள் பிரச்சினை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் […]

அரிசிக்கான விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி

அரிசிக்கான உச்சபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இந்த அறிவித்தல் வெளியிடப்படுள்ளது. இதற்கமைய, வெள்ளை – சிவப்பு நாடு அரிசி கிலோ ஒன்றின் விலை 220 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வெள்ளை – சிவப்பு சம்பா அரிசி கிலோ ஒன்றின் விலை 230 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கீரி சம்பா கிலோ ஒன்றின் விலை 260 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு […]

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி

நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை சுமார் 50% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, கடந்த மாதத்தில் 60,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர் என்றும் எனினும் மார்ச் மாதம் கிட்டத்தட்ட 110,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. நாட்டிற்கு தினசரி சுற்றுலாப் பயணிகளின் வருகையும் 1000-1500க்கு இடையில் குறைந்துள்ளதுடன், மார்ச் மாதத்தில் தினசரி சுற்றுலாப் பயணிகளின் வருகை […]

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இழப்பு 41.7 பில்லியன் ரூபா

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 2021 ஆம் ஆண்டளவில் 41.7 பில்லியன் ரூபா நட்டத்தை சந்தித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு அரச நிறுவனங்களின் நிலுவைத் தொகை 2021ஆம் ஆண்டளவில் 161.1 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததன் காரணமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நாணய மாற்று வீத ஏற்ற இறக்கங்களில் […]

மதுபானத்தின் மூலம் கிடைக்கும் வரி வருமானத்தை இழக்கும் நிலையில் அரசு

எதிர்காலத்தில் மதுபானத்தின் மூலம் கிடைக்கும் வரி வருமானத்தை அரசாங்கம் பெறாமல் போகும் அபாயம் உள்ளது. நாட்டில் உள்ளூர் மதுபான உற்பத்திக்குத் தேவையான எத்தனோல் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள கடும் தடைகளே இதற்குக் காரணம் என நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலை தவிர்க்கப்படாவிட்டால் கலால் வருவாயிலிருந்து அரச ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்குவது உட்பட பல செலவுகளைச் செய்ய முடியாத நிலை ஏற்படும் எனக் கூறப்படுகிறது. தற்போது, ​​நாட்டிலுள்ள ஐந்து முக்கிய மதுபான ஆலைகளுடன் இணைந்து உள்ளூர் மதுபானங்கள் […]

அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு அனுப்ப தமிழக அரசுக்கு அனுமதி

இலங்கை மக்களுக்கு தமிழகத்தின் சார்பில் அரிசி, மருந்து, பால் மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப அனுமதியளித்து, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்,கடிதம் அனுப்பியுள்ளார். இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால், தவிக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில் முதல்கட்டமாக அரிசி, மருந்து, பால் மா என இந்திய நாணயத்தில் ரூ.123 கோடிக்கு அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு அனுப்ப அனுமதியளிக்கக் கோரி தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இலங்கை மக்களுக்கு தமிழக அரசின் […]