எரிபொருள் விலைகள் குறைப்பு!

எரிபொருள் விலையினை குறைப்பதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒக்டென் 92 ரக பெற்றோல் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 450 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது. ஒக்டென் 95 ரக பெற்றோல் 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், 540 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. அத்துடன், டீசல் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 440 ரூபாவுக்கும், சுப்பர் டீசல் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு 510 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது. இன்று இரவு 10 மணி முதல் இந்த எரிபொருள் விலைத்திருத்தம் அமுலாகவுள்ளதாக […]
நடமாடும் எரிபொருள் விற்பனை நிலையங்கள்

முச்சக்கர வண்டிகள் மற்றும் ஜெனரேட்டர்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் முன்னோடித் திட்டமாக முதலில் நடமாடும் எரிபொருள் விற்பனை நிலையங்கள் அறிமுகப்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். டிரக்குகளில் பொருத்தப்பட்ட எரிபொருள் விநியோகிகள் மூலம் முச்சக்கர வண்டிகள், டெலிவரி பைக்குகள் மற்றும் கேன்களுக்கு எரிபொருளைப் வழங்கும் .எதிர்காலத்தில் இந்த முறையை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்துவதற்கு அமைச்சு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் […]
கோட்டாபய மீண்டும்நாட்டிற்கு அவருக்கு பல சலுகைகள்

மக்கள் எதிர்ப்பால் நாட்டை விட்டு வெளியேறி, ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் இலங்கை திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓய்வு பெற்ற ஜனாதிபதிக்குரிய சிறப்புரிமைகளைப் பெற உள்ள கோட்டாபய ராஜபக்சவிற்கு கொழும்பில் உத்தியோகபூர்வ இல்லம், பாதுகாப்பு, வாகனங்கள் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படவுள்ளதாகவும் அது, அவருக்கும், அவரது மனைவிக்கு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள கோட்டாபய ராஜபக்ச இன்னும் ஒரு மாதத்தில் நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புலத்தையும் நிலத்தையும் […]
140 வாக்குகளைபெற்று அமோகமாக வெற்றிபெறுவார்

இடைக்கால ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பு ஜுலை 20 ம் திகதி நாடாளுமன்றத்தில் நடைப்பெறவுள்ள நிலையில், இவ்வாக்கெடுப்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுமார் 140 வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் என முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ் எதிர்வு கூறலை வெளியிட்டுள்ளார். “ தற்போது நாட்டிற்குத் தேவையான விடயங்கள் குறித்து கட்சித் தலைவர் என்ற ரீதியில்யில் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடியுள்ளேன். நான் உணர்ந்த வரையில் பதில் ஜனாதிபதி […]
பதிவு செய்யும் வகையில் எரிபொருள் பாஸ் மேம்படுத்தப்படும்

வர்த்தக நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் பல வாகனங்களை கொண்டிருக்கும் நிலையில் தங்களது அனைத்து வாகனங்களையும் வணிகப் பதிவு எண்ணுடன் பதிவு செய்வதற்கான வசதியை வழங்கும் வகையில் தேசிய எரிபொருள் பாஸ் அடுத்த சில நாட்களில் மேம்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். குறித்த இணையத்தளத்தில் பதிவு செய்யப்படும் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு பின் ஒவ்வொரு வாகனத்திற்கும் குறிப்பிட்ட QR குறியீடு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் […]
எச்சரிக்கைகள் கிடைத்தும் கோட்டை விட்ட கோட்டாபய

2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நிதி அமைச்சின் அதிகாரிகள் இலங்கையின் மோசமான நிதி நிலைமை குறித்து அமைச்சரவைக்கு அறிவிக்கத் தொடங்கினர், மேலும் ஏற்றுமதி மற்றும் பணம் அனுப்புதல் ஆகிய இரண்டிலும் குறைந்தது 50 சதவிகிதம் சரிவடையும் என்று எச்சரித்துள்ளனர்.எனினும் கோட்டாபய அரசு முறையான நடவடிக்கைகள் எடுக்காத தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது மே 13, 2020 திகதியிட்ட அமைச்சரவைக் குறிப்பில், நிதியமைச்சகம், கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதார மந்தநிலையின் கணிப்புகளைக் கருத்தில் கொண்டு, ஏற்றுமதி மற்றும் பணம் அனுப்புதல் […]
இலங்கைக்கு பெருமளவு மருந்துகள் நன்கொடை

இவ்வாறு இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 32 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட மருந்துகள் மற்றும் மருத்துவ உதவிகளில் முதல் பகுதியை இலங்கை பெற்றுள்ளதுடன், அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்கவின் தலையீட்டின் மூலம் ‘ஹார்ட் டு ஹார்ட்’ என்ற சர்வதேச அமைப்புடன் இணைந்து இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மக்களுக்கு சர்வதேச உதவிகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் மிகவும் அவசியமான நிலையில், Heart to Heart என்ற சர்வதேச அமைப்பு காட்டிய அர்ப்பணிப்புக்காக இலங்கை மக்களும் தூதரகமும் அந்நிறுவனத்துக்கு […]