ஜூலை 21 முதல் சிபெட்கோ எரிபொருள் விநியோகம்

சிபெட்கோ பெற்றோல் நிலையங்கள் ஊடாக எரிபொருள் விநியோகம் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் QR குறியீடு மற்றும் வாகனத்தின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம் செய்யப்படும் எனவும் எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அன்றைய தினம் முதல் எரிபொருள் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். எதிர்வரும் 21ஆம் திகதி முதல் இராணுவத்தினரால் வழங்கப்பட்டு வந்த ‘துண்டுச் சீட்டு (டோக்கன்) […]

ரணில் நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தியுள்ளார்

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தியுள்ளார். இதில், மே 13ஆம் திகதி தாம் பிரதமராகப் பதவியேற்ற போது, ​​நாளொன்றுக்கு 5 மணித்தியாலங்கள் மின்வெட்டு ஏற்பட்டதன் மூலம் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருந்தது. அதன் பின்னர் இரண்டு மாதங்களில் மின்துண்டிப்பு 3 மணித்தியாலமாக குறைக்கப்பட்டு விவசாயிகளுக்கு உரம் வழங்கப்பட்டு நாட்டில் எரிவாயு தட்டுப்பாடும் தீர்க்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் எரிபொருள் விநியோகத்திற்கு கடினமான காலமாக இருக்கும் என நான் முன்னதாக தெரிவித்த நிலையில், டீசல் இருப்புக்கள் பாதுகாக்கப்பட்டு […]

GOTA GO HOME உறுப்பினர்களுக்கு வெளிநாட்டிலிருந்து நிதி?

காலி முகத்திடல் போராட்டத் தளமான கோட்டா கோ ஹோமின் மூன்று முன்னணி செயற்பாட்டாளர்கள் வெளிநாடுகளில் இருந்து மூன்று உள்ளூர் வங்கிக் கணக்குகளுக்கு பெருமளவிலான நிதியைப் பெற்றதாகக் கூறப்படும் அறிக்கைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் முறைப்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. எனினும் குற்றப்புலனாய்வுத்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ரட்டா, திலான் சேனாநாயக்க மற்றும் அவிஷ்க விராஜ் கோனார […]

பொது அவசர நிலை பிரகடனம்!

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கையில் பொது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில், பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் இன்று முதல் இலங்கை முழுவதும் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளைப் பேணுதல் ஆகியவற்றின் நலன்களுக்காக இலங்கையில் பொது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் […]

15 நாட்களுக்குள் சிங்கப்பூரை விட்டு வெளியேறக் கோரிக்கை

கோட்டாபய ராஜபக்ச தொடர்ந்து சிங்கப்பூரில் தங்கியிருப்பதால் பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்படலாம். எனவே பதினைந்து நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எதிர்ப்பு போராட்டத்தின் காரணமாக கோட்டபாய ராஜபக்ச மாலைதீவுக்கு தப்பிச் சென்றதுடன் பின் அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்று, அங்கு தனது நண்பர் ஒருவருக்குச் சொந்தமான வீட்டில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்சவை நேற்று சந்தித்த சிங்கப்பூர் அமைச்சர் காசிவிஸ்வநாதன் சண்முகம், சிங்கப்பூர் […]

உலகப் பொருளாதார வளர்ச்சி மேலும் வீழ்ச்சியடையும்

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் உலகப் பொருளாதார வளர்ச்சி மேலும் விழ்ச்சியடையும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்த நிலையைக் கருத்தில் கொண்டு, வளர்ந்து வரும் மற்றும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு வலுவான கொள்கைத் திட்டம் தேவை என்று நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டர்லினா ஜார்ஜீவா Kristalina Georgieva சுட்டிக்காட்டியுள்ளார். ஆகக்கூடிய கடன் மற்றும் வாழ்தாரக் கொள்கையைக் கொண்டுள்ள நாடுகளின் பொருளாதாரத்திற்கு இலங்கை எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்துள்ளதைச் சுட்டிக்காட்ட முடியுமென்றும் முகாமையாளர் […]

இலங்கையில் உணவு நெருக்கடி அதிகரிக்கக்கூடும்

விதை நெல் உற்பத்திக்கு தேவையான வசதிகளுடன் எரிபொருள் மற்றும் உரம் ஆகியன விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லையெனில் அரசியல் நெருக்கடியை காட்டிலும், உணவு நெருக்கடி அதிகரிக்கக்கூடும் என முன்னாள் விவசாய பணிப்பாளர் நாயகம் கே. பி குணரட்ன தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக, அடுத்த போகத்திற்கு தேவையான விதை நெல்லை உற்பத்தி செய்வதற்கு இயலாமல் போயுள்ளது. எனவே, இந்தவிடயத்தில் அரசாங்கம் உடனடியாக தலையிட்டு விவசாயிகளுக்கு தேவையான […]