எச்சரிக்கைகள் கிடைத்தும் கோட்டை விட்ட கோட்டாபய

2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நிதி அமைச்சின் அதிகாரிகள் இலங்கையின் மோசமான நிதி நிலைமை குறித்து அமைச்சரவைக்கு அறிவிக்கத் தொடங்கினர், மேலும் ஏற்றுமதி மற்றும் பணம் அனுப்புதல் ஆகிய இரண்டிலும் குறைந்தது 50 சதவிகிதம் சரிவடையும் என்று எச்சரித்துள்ளனர்.எனினும் கோட்டாபய அரசு முறையான நடவடிக்கைகள் எடுக்காத தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது மே 13, 2020 திகதியிட்ட அமைச்சரவைக் குறிப்பில், நிதியமைச்சகம், கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதார மந்தநிலையின் கணிப்புகளைக் கருத்தில் கொண்டு, ஏற்றுமதி மற்றும் பணம் அனுப்புதல் […]
இலங்கைக்கு பெருமளவு மருந்துகள் நன்கொடை

இவ்வாறு இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 32 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட மருந்துகள் மற்றும் மருத்துவ உதவிகளில் முதல் பகுதியை இலங்கை பெற்றுள்ளதுடன், அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்கவின் தலையீட்டின் மூலம் ‘ஹார்ட் டு ஹார்ட்’ என்ற சர்வதேச அமைப்புடன் இணைந்து இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மக்களுக்கு சர்வதேச உதவிகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் மிகவும் அவசியமான நிலையில், Heart to Heart என்ற சர்வதேச அமைப்பு காட்டிய அர்ப்பணிப்புக்காக இலங்கை மக்களும் தூதரகமும் அந்நிறுவனத்துக்கு […]
இலங்கை செயலிழந்துவிடும் – மத்திய வங்கி ஆளுநர்

நிலையான அரசாங்கமொன்றை விரைவில் அமைக்கத் தவறினால், இலங்கை செயலிழந்த நிலைக்கு தள்ளப்படும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அத்தியாவசிய எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான அந்நியச் செலாவணியைப் பெற்றுக்கொள்ளவது நிச்சயமற்ற சூழ்நிலையாக மாறியுள்ளது என்று பி பி சி க்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் ஸ்திரமின்மை காரணமாக சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கிடைக்க உள்ள கடன் தொகையை பெறுவது கூட தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் […]
நிவாரணத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது

பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைப்பதற்கு எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் துரித நிவாரணத் திட்டமொன்றை ஆரம்பிக்க பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முன்வைக்கப்படவுள்ள நிவாரண வரவு செலவுத் திட்டத்திற்கு வரவு செலவுத் திட்டத்தில் மேலதிக நிதியை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எரிபொருள் […]
எரிபொருள் அட்டை அறிமுகம் இப்போதே பதிவு செய்யுங்கள்

நாடு முழுவதும் வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டினை உறுதி செய்வதற்கு ஒரே எரிபொருள் பாஸ் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‘தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு’ வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். உத்தரவாதமான வாராந்திர எரிபொருள் ஒதுக்கீடு ஒதுக்கப்படும். 1 அடையாள அட்டைக்கு 1 வாகனம், வாகன சேஸி எண் மற்றும் விவரங்கள் சரிபார்க்கப்பட்டவுடன் QR குறியீடு ஒதுக்கப்படும். QR உடன் எரிபொருளை நிரப்புவதற்கான இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின்படி வாரத்தின் […]
தேசிய எரிபொருள் அட்டை முறைமை கடினமானது – ஹர்ஷ

வாகன உரிமையாளர்களுக்கான கோட்டா முறையின் கீழ் வாராந்த எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக இன்று (16) அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தில் பதிவு செய்வது கடினம் என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார் என்று அவர் ஒரு ட்வீட்டில் கூறியுள்ளார். குறித்த இணையத்தளம் அறிமுகம் செய்யப்பட்டு சில மணித்தியாலங்கள் ஆகியும் பலமுறை முயற்சித்தும் உரிய இணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்யமுடியவில்லை என அவர் அந்த டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவருக்குப் பதிலளித்ததில், அந்த ட்விட்டர் […]
கல்வி அமைச்சிற்கு வழங்கப்பட்ட 1,000 மெற்றிக் டன் அரிசி

பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கான உணவு வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் சீனாவினால் 1,000 மெற்றிக் டன் அரிசி கல்வி அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளது. சீன உணவு உதவி திட்டத்தின் கீழ் 10,000 மெற்றிக் டன் அரிசி இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது. அதன் இரண்டாம் கட்ட அரிசி தொகுதியே பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் 9 மாகாணங்களுக்கு உட்பட்ட 11 இலட்சம் மாணவர்களுக்காக ஒரு நேர போசாக்கான உணவை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகவுள்ளது. இந்த செயற்பாடானது மாணவர்களுக்கு வழங்கப்படும் விஷேட உதவி […]