QR முறைமையில் எரிபொருள் பெற முடியும்!

பல வாகனங்களை கொண்ட வணிகங்கள் தங்களது வாகனங்களை வர்த்தக பதிவு எண்ணின் ஊடாக எரிபொருள் அனுமதிப் பத்திர முறைமைக்கு (QR முறைமை) பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது ட்விட்டர் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இயந்திரங்களுக்கான எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக வாராந்த எரிபொருள் தேவைகளுடன் உரிய பிரதேச செயலகங்களில் பதிவு செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் […]
இரு நாட்களில் 5 பேர் சுட்டுக்கொலை!

நாட்டில் கடந்த இரண்டு நாட்களில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் 5 பேர் பலியானதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர். இதனடிப்படையில் அண்மைய துப்பாக்கி சூடு நேற்று (27) இரவு இரத்மலானை –சில்வா மாவத்தை பகுதியில் நடத்தப்பட்டது. ஆயுதங்களுடன் வீட்டுக்குள் நுழைந்த இருவர் முச்சக்கரவண்டி சாரதி மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 30 வயதான ஒருவரே உயிரிழந்தார். எதற்காக இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்பது தொடர்பில் இதுவரையில் தகவல் வெளியாகவில்லை. இதேவேளை, அம்பலாங்கொடை […]
உண்டியல் முறை பணப்பரிமாற்றம், வெளிநாட்டு நாணயங்களுடன் ஒருவர் கைது!

வெலிகமவில் உண்டியல் முறையின் கீழ் வெளிநாட்டுப் பணத்தைப் பரிமாற்றும் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிகம, கல்பொக்க பிரதேசத்தில் நேற்று (27) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்நபர் கைதுசெய்யப்பட்டார். கல்பொக்க பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதன்போது, உண்டியல் முறையில் வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக வைத்திருந்ததாக கருதப்படும் சுமார் ஒரு கோடியே அறுபத்தேழு இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. […]
1, 19, 28 பிறந்தவர்களின் ரகசியம்

1, 19, 28 பிறந்தவர்களின் ரகசியம் புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
ராஜித்தவின் 8 கப்பல்கள் விவகாரம்

பராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன, மீன்பிடி அமைச்சராக இருந்த போது, அவரது இணைப்புச் செயலாளராக இருந்த ஒருவரின் பெயரில் ஆழ் கடலில் மீன் பிடி நடவடிக்கைகளை முன்னெடுக்க என, 8 மீன் பிடி கப்பல்களை தருவித்தமை, முகத்துவாரம் மீன் பிடி துறைமுகத்தை குத்தகைக்கு விடுவது தொடர்பிலான நடவடிக்கையின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பிலான வழக்கை வாபஸ் பெறுவதாக சி.ஐ.டி.யினர் நேற்று முன் தினம் (25) நீதிமன்றுக்கு அறிவித்தனர். கொழும்பு மேலதிக நீதிவான் கேமிந்த பெரேராவுக்கு அவர்கள் […]
நேரத்தை ஒதுக்கியோருக்கு மாத்திரமே கடவுச்சீட்டு

திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கியோருக்கு மாத்திரமே இன்று முதல் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் மீளவும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அவசரமாக வெளிநாடு செல்லவுள்ளோருக்கான விசேட ஒருநாள் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, அவசர தேவையின் நிமித்தம் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதாயின் தமது தகவல்களை 070 63 11 711 என்ற WhatsApp இலக்கத்திற்கு அனுப்பும் பட்சத்தில், கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான […]
மாணவர்களின் மதிய உணவுக்கு சீனாவிலிருந்து அரிசி

500 மில்லியன் யுவான் மனிதாபிமான உதவியின் கீழ் சீனா வழங்கிய 5ஆவது கட்ட அரிசி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த அரிசிக் கையிருப்பு 1000 மெட்ரிக் தொன் என்பதுடன் இது பாடசாலை மாணவர்களின் மதிய உணவுத் தேவைக்கு பயன்படுத்தப்படவுள்ளது. அதன்படி இதுவரை சீனா வழங்கிய மொத்த அரிசியின் அளவு 4000 மெற்றிக் தொன் ஆகும். மேலும் 6000 மெட்ரிக் தொன் சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது. அந்த அரிசிக் கையிருப்பு இலங்கையின் 7900 பாடசாலைகளில் உள்ள 11 மில்லியன் மாணவர்களுக்கு […]