கடந்த வருடம் 382,506 , இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 282,506 வெளிநாட்டு கடவுச்சீட்டு

இந்த வருடத்தின் முதல் ஐந்து மாத காலப்பகுதியில் வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

கடந்த வருடம் 382,506 வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டன.

எனினும், இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் மாத்திரம் 282,506 வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக பெரும்பாலானோர் வெளிநாட்டு வேலை வாய்ப்பை நாட முன்வந்துள்ளமையே இதற்கான காரணம் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் பியும் பண்டார தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக இந்த நாட்களில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அருகில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

நேரத்தை ஒதுக்கி கொள்கின்றமைக்கு அமைய, நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 500க்கும் அதிகமானவர்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான காரியாலயம் ஊடாக சேவை வழங்கப்படுகின்றது.


🛒 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் lankaface.com


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்