உள்ளூர் நிறுவனங்களினால் அதிகரிக்கப்பட்ட மதுபானங்களின் திருத்தப்பட்ட விலை அறிவித்தலை உடனடியாக விற்பனை நிலையங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மதுவரித் திணைக்களம் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மதுவரித் திணைக்கத்தின் பேச்சாளர் கபில குமார சிங்க இதனைக் குறிப்பிட்டார்.
திருத்தப்பட்ட விலை இன்மையால் மதுபானசாலைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் மதுவரித் திணைக்களத்திற்கு சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் அது தொடர்பான அறிவித்தல் சில நிறுவனங்களினால் வழங்கப்படாது உள்ளமை தெரியவந்துள்ளது.
விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படுமாயின் மதுபானசாலைகளுக்கும் மதுவரித் திணைக்களத்துக்கும் உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும் என மதுவரித் திணைக்கத்தின் பேச்சாளர் கபில குமார சிங்க தெரிவித்துள்ளார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





