தனியார் எரிபொருள் தாங்கி ஊர்தி சாரதிகள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது.
கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவருடனான சந்திப்பில் ஏற்பட்ட இணக்கப்பாட்டை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தனியார் எரிபொருள் தாங்கி ஊர்தி சாரதிகள் சங்கத்தின் தலைவர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து போக்குவரத்து கட்டணத்தை 40 சதவீதத்தால் அதிகரிக்குமாறு கோரி தனியார் எரிபொருள் தாங்கி ஊர்தி சாரதிகள் நேற்று முன்தினம் முதல் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்திருந்தனர்.
தங்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் 30 சதவீத அதிகரிப்பை வழங்குவதாக உறுதியளித்தார்.
இன்னும் இரண்டு மாதங்களில், தங்களது போக்குவரத்து கட்டண விலை சூத்திரத்தை அமுல்படுத்த இணங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனால் இன்று பிற்பகல் முதல் பணிப்புறக்கணிப்பினை கைவிட்டுள்ளதாக தனியார் எரிபொருள் தாங்கி ஊர்தி சாரதிகள் சங்கத்தின் தலைவர் சாந்த சில்வா குறிப்பிட்டுள்ளார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





