நாடளாவிய ரீதியில் சில பகுதிகளில் உள்ள சந்தையில் உள்ளூர் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு கிலோ உள்ளூர் சம்பா அரிசியின் விலை சுமார் 280 ரூபாவாக அதிகரித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், ஒரு கிலோ உள்ளூர் சம்பா அரிசி 220 ரூபாவிற்கு அரிசி ஆலைகளால் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விலை உயர்வால் உள்ளூர் சம்பா அரிசியை வாங்கும் நுகர்வோருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் வர்த்தகத்துறை அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிடம் வினவிய போது, உள்ளூர் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தமக்கு எவ்வித அறிக்கையும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.
எனினும், இது தொடர்பில் இன்றைய தினம் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





