இலங்கைக்கான 400 மில்லியன் டொலர் கடன் நாணயப்பரிமாற்ற கால எல்லை இந்திய மத்திய வங்கியினால் நீடிக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு இந்தியா வழங்கும் பன்முகப்படுத்தப்பட்டதும் தாராளமானதுமான ஆதரவு தொடர்வதாக உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கிக்கான 400 மில்லியன் அமெரிக்க டொலர் நாணயப் பரிமாற்ற கால எல்லை இந்த ஆண்டு ஜனவரியில் நிறைவடைந்தது.
இந்த நிலையில், இந்திய ரிசர்வ் (மத்திய) வங்கியினால் தற்போதைய நாணயம் சார் ஆதரவாக, இந்த காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகரம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பங்களாதேஷும் 450 மில்லியன் டொலர் பரிமாற்றக் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு இலங்கைக்கு மேலதிக கால அவகாசம் வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





