‘பாதீட்டுத் திட்டத்திலிருந்து ஒரு இலட்சம் வேலைகள் – கிராமிய அபிவிருத்தி’ வேலைத்திட்டத்தை இந்த ஆண்டுக்குள் நிறைவு செய்வதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறித்த வேலைத்திட்டம் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் இணையம் ஊடாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதனையடுத்து கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் உள்ள 25 மாவட்டங்களையும் கேந்திரப்படுத்தி இந்த அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
மக்களுக்காகத் தெரிவு செய்யப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
இன்று முற்பகல் 8.52 அளவில் இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ 12 மாதங்களில் அதனை நிறைவு செய்வதற்கு எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் பல கிராமங்களுக்குச் சென்று மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து ‘பாதீட்டுத் திட்டத்திலிருந்து ஒரு இலட்சம் வேலைகள் – கிராமிய அபிவிருத்தி’ வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com