நம்மில் பல பேர் வாழ்க்கை இப்படித்தான் ஓடுது. நேரத்தை கொடுத்து பணத்தை வாங்குறோம்.
மாச சம்பளம், தினக்கூலி… நாம் வேலை செஞ்சா தான் பணம். நாம் நிறுத்தினா பணமும் நிறுத்திடும். ஏன்னா நம்மகிட்ட இருக்கிற நேரம் ரொம்ப குறைவு, அதனால வருமானமும் ஒரு அளவுக்கு மேல போக முடியாது.
இந்த Cycle-ல இருந்து வெளிய வரணும்னா ஒரே வழி, நமக்காக நம்ம பணமே வேலை செய்ய வைக்கிறது தான். நாம் தூங்கும் போதும் நமக்கு வருமானம் வரணு
அதுக்கு நான் தெரிஞ்சுகிட்ட சில வழிகள்:
- பணத்தை வைத்து சொத்து வாங்குவது:
Dividend தரும் பங்குகள், Index Funds, Bonds, REITs மாதிரி இடங்களில் முதலீடு செய்வது. ஆரம்பத்தில் சின்னதா தெரிஞ்சாலும், கூட்டு வட்டி மூலமா அது பெரிய சொத்தா வளரும். - ஒரு தடவை உருவாக்கி பல தடவை விற்பது:
ஒரு E-book, ஒரு Online Course, இல்லை ஒரு Template, ஒரு Software என ஒரு தடவை நம்ம அறிவை வைத்து உருவாக்கி, அதை உலகம் முழுக்க திரும்ப திரும்ப விற்கலாம். - வாடகை வருமானம்:
ஒரு சின்ன வீடோ, நிலமோ, கடையோ வாங்கி வாடகைக்கு விடுவது. முதலீடு கொஞ்சம் அதிகம் தான், பராமரிப்பு இருக்கும், ஆனா மாசம் மாசம் ஒரு நிலையான வருமானம் கொடுக்கும். - ஒரு System-ஐ உருவாக்குவது:
ஒரு Blog, YouTube Channel, இல்லை ஒரு சின்ன Business Platform ஆரம்பிச்சு, அதிலிருந்து விளம்பரம், Subscription, Affiliate மூலமா வருமானம் பார்ப்பது. நாம் ஒரு தடவை போட்ட உழைப்பு, வருஷக்கணக்கா பலன் கொடுக்கும்.
உண்மை என்னன்னா, இது எதுவுமே ஒரே நாள்ல நடக்காது. ஆரம்பத்தில் நிறைய நேரத்தையோ அல்லது பணத்தையோ போட்டு தான் ஆகணும். ஆனா அந்த உழைப்பு தான் பின்னாடி நம்மை பார்த்துக்கும்.
Warren Buffett சொன்ன மாதிரி, தூங்கும் போது சம்பாதிக்க வழி தேடலைனா, வாழ்நாள் முழுக்க உழைச்சிட்டே தான் இருக்கணும்.

Post Views: 7





