யாழ்: இரட்டை சகோதரிகள் தமக்கு தாமே தீ .யிட்டு தற். கொ. லை

வாழ்வதற்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்து இரட்டை சகோதரிகள் தமக்கு தாமே தீ. யிட்டு தற்கொ. லை.. யாழ் புன்னாலைக்கட்டுவானில் பதற வைக்கும் சம்பவம்..ஒரே குடும்பத்தின் இரு மலர்கள்… ஒரே நேரத்தில் வாடிய சோகம்!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் வடக்கு, குப்பிளான் பகுதியில்
அபர்ணா, அபிநயா எனும் இரட்டைச் சகோதரிகள் அகால மரணமடைந்த செய்தி பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அன்பும் பாசமும் நிறைந்த குடும்பத்தில் ஒன்றாக வளர்ந்து, கல்விப் பயணத்திலும் ஒன்றாக பயணித்த இருவரும் இன்று எம்மை விட்டு பிரிந்திருப்பது ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்துகிறது.

இவர்கள் தமது ஆரம்பக் கல்வியை குப்பிளான் விக்கினேஸ்வரா வித்தியாலயத்திலும், இடைநிலை மற்றும் உயர்தரக் கல்வியை வயாவிளான் மத்திய கல்லூரியிலும் கற்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இரு சகோதரிகளின் அகாலப் பிரிவு குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கல்விச் சமூகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அபர்ணா – அபிநயா ஆகிய இரு சகோதரிகளின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்