நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (29) மேலும் அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 286.31 ரூபாவாகவும், 295.04 ரூபாவாகவும் உள்ளது.
நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது நேற்றைய தினம் முறையே 286.57 ரூபாவாகவும், 295.58 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.
மத்திய கிழக்கு நாணயங்களுக்கு நிகராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று அதிகரித்துள்ளது.
அதேநேரம், ஏனைய பல வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராக ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சி கண்டுள்ளது.
Post Views: 104