நல்ல கருத்து! மட்டக்களப்பாரைப் பார்த்து திருந்துங்கள்…..

மட்டக்களப்பாரைப் பார்த்து திருந்துங்கள் என யாழ்பாணத்தாரை இகழும் பதிவுகள் பல சமூக வலைத்தளங்களில் தென்படுகின்றன.

தமிழருக்கு எப்படி யாழோ அதே போல சிங்களவர் பரவபலாக வாழும் மாத்தறையில் ஒரு தமிழ்ப் #பெண் அதிகப்படியான அதாவது 148,379 வாக்குகளைப் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார்.

யாழில் NPP எந்தவொரு சிங்கள வேட்பாளர்களையும் நிறுத்தவில்லை. அதே சமயம் ஒரு தமிழ்ப் பெண் வேட்பாளரை மாத்தறையில் தவிர்க்கவும் இல்லை.
களங்கள் மாறும் பொழுது அதற்கேற்ப கொள்கைகளும் மாற
வேண்டும். அதுவே சிறந்த தலைமைத்துவத்திற்கு அழகு.

இதனைக் கருத்தில்கொண்டு இனவாத கருத்துக்களை தவிர்ப்பது இக் காலத்தில் சிறந்தது.

ஒரு அரசாக அவர்கள் புதியவர்கள். பழைய சம்பவங்களால் இந்த அரசு மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால், அவர்களுக்கான கால அவகாசத்தை வழங்கி சற்றே ஒதுங்கியிருங்கள்.

அவர்கள் பிழைவிட்டால் அதன் பின்னர் கதையுங்கள். அதுவே சிறந்தது….!!
நாடாளுமன்றத்தேர்தல் 2024

தவறுகள் தவறு என்று உணர்த்தப்பட்டு திருத்தப்பட வேண்டும் . அதே நேரம் குற்றச்சாட்டுகளுடன் கிண்டல்களும் கேலிகளும் தவிர்க்கப்பட வேண்டும்.
மேன்மக்கள் என்றும் மேன்மக்கள் தான். நீங்கள் மேன்மக்களா என்பதை குறித்து ஆராய்ந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்