நீங்கள் 3,12,21,30 எண்ணில் பிறந்தவரா?

3,12,21,30 தேதிகளில் பிறந்த இவர்களது எண்ணான 3 எண்காரர்களின் இயல்பு எப்படியிருக்கும் என்பது பற்றிக் காண்போம்.

தங்களுடைய சொல்லையே பிறர் கேட்டு நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் .பல இடங்களில் இவர்கள் சொல்வதே முடிவாக வர வேண்டும் என்று விரும்புவர் .

இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு பொறாமை குணங்கள் இடைக்கிடை தலைதூக்கும் .
மதி நுட்பத்தால் மாட்சிமை பெறும் இவர்களுக்கு உடல் உழைப்பு என்பது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று. இவர்களைப் போன்றே இவர்கள் உடம்பும் மிகவும் மென்மையானது. பல உணவு வகைகள் அலர்ஜி என்ற சமாச்சாரத்தை இழுத் துக்கொண்டு வந்துவிடும். உணவுக் கட்டுப்பாடு அவசியம். எவர் பணமாவது இவர்கள் கையில் இருந்துகொண்டே இருக்கும்.

பொன் ஆபரணங்களை அதிகம் விரும்புவர். மத நம்பிக்கை அதிகம். தன் சமாச்சாரங்களை பிறரிடம் சொல்ல மாட்டார்கள்.இவர்களின் ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் . மற்றையோர் இவர்களுக்கு பணிந்து நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பர். புகழுக்காகவும், உயர்வுக்காகவும் மனம் அலைபாயும். இவர்கள் நேர்மையாளர்களாக நடந்தால் வாழ்வில் உன்னதமான உயர்வுக்கு வழி தரும்.

சிறப்புச் செய்திகள்