விபத்துக்குள்ளான யாழ் பஸ் – 51 பேர் காயம்.

யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று மூதூர் பகுதியில் விபத்துக்குள்ளானது.

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் கங்கை பாலத்துக்கு அருகில் கீழே விழுந்து இந்த பேருந்து விபத்துக்குள்ளானது.

இதில் 51 பேர் காயமடைந்திருப்பதாகச் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் மூதூர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்