சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை நாளைய தினம் குறைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
லிற்றோ எரிவாயு நிறுவன தலைவரை கோடிட்டு இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி சுமார் 200 ரூபா அளவில் விலை குறைப்பு மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் நாளைய தினம், அமைச்சரவையில் இந்த விடயம் முன்மொழியப்பட்டு, விலை குறைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என்ற அடிப்படையில் தேனீர் மற்றும் உணவுப்பொதிகளின் விலையில் குறைப்பு மேற்கொள்ளப்படும் என்று சிற்றுணவு உரிமையாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 342





