கடந்த 24 மணித்தியாலங்களில் நாடு முழுவதும் சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமைக்காக 33 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.
காவல்துறையினர் 31 இடங்களில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 1,108 லீட்டர் பெற்றோல் மற்றும் 1,441 லீட்டர் டீசல் என்பன மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி விற்பனை செய்த குற்றச்சாட்டு – 24 மணித்தியாலங்களில் 33 பேர் கைது
இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது எரிபொருளை பதுக்கி வைத்தல், சேமித்து வைத்தல் மற்றும் விற்பனை செய்தமை தொடர்பில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக எரிபொருள் பதுக்கல், சேமிப்பு மற்றும் விற்பனை தொடர்பாக நாடளாவிய ரீதியில் பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டனர்.
இந்த சோதனைகளின் போது 1108 லிற்றர் பெற்ரோல், 1441 லிற்றர் டீசல் மற்றும் 9 லிற்றர் மண்ணெண்ணெய் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
இதுவரை, நாடு முழுவதும் மொத்தம் 1,220 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன, அந்த சோதனைகளில் இருந்து 1,145 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அங்கு 38,029 லிற்றர் பெற்ரோல், 123,945 லிற்றர் டீசல் மற்றும் 19,238 லிற்றர் மண்ணெண்ணெய் ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, எரிபொருள் வரிசையில் அத்துமீறி நடந்து கொண்ட 10 பேரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com





