கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100)1 ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 மேயின் 39.1 சதவீதத்திலிருந்து 2022 யூனில் 54.6 சதவீதத்திற்கு அதிகரித்தது.
ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையிலான பணவீக்கத்தின் இவ்வதிகரிப்பானது உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டினதும் மாதாந்த அதிகரிப்புக்களினால் தூண்டப்பட்டிருந்தது.
அதற்கமைய, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2022 மேயின் 57.4 சதவீதத்திலிருந்து 2022 யூனில் 80.1 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 மேயின் 30.6 சதவீதத்திலிருந்து 2022 யூனில் 42.4 சதவீதத்திற்கு அதிகரித்தது.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம், 2022 யூனில் 12.80 சதவீதமாகப் பதிவாகியது. இதற்கு, முறையே 6.81 சதவீதமாகவும் 5.99 சதவீதமாகவும் காணப்பட்ட உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டினதும் பொருட்களில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள் காரணமாக அமைந்தது.
உணவு வகையினுள் உடன் மீன், காய்கறிகள், பாண், அரிசி மற்றும் பால்மா என்பவற்றின் விலைகள் மாதகாலப்பகுதியில் கணிசமாக அதிகரித்தன.
மேலும், போக்குவரத்து (பெற்றோல், டீசல், பாடசாலை வான் கட்டணங்கள் மற்றும் பேருந்துக் கட்டணம்), உணவகம் மற்றும் விடுதிகள், கல்வி (இரண்டாம்நிலைக் கல்விக்கான பிரத்தியேக வகுப்புக் கட்டணங்கள்) வீடமைப்பு, நீர், மின்வலு, எரிவாயு மற்றும் ஏனைய எரிபொருட்கள் (திரவப்பெற்றோலிய வாயு மற்றும் பராமரித்தல்/ மீள்கட்டுமானம்), ஆகிய துணை வகைகளில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்களைப் பிரதான காரணமாகக் கொண்டு உணவல்லா வகையினுள் உள்ள பொருட்களின் விலைகள் அதிகரிப்புக்களைப் பதிவுசெய்தன.
அதேவேளை, ஆண்டுச் சராசரி பணவீக்கம் 2022 மேயின் 14.2 சதவீதத்திலிருந்து 2022 யூனில் 18.4 சதவீதத்திற்கு அதிகரித்தது.
பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2022 மேயின் 28.4 சதவீதத்திலிருந்து 2022 யூனில் 39.9 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கம், 2022 மேயின் 10.2 சதவீதத்திலிருந்து 2022 யூனில் 13.3 சதவீதத்திற்கு அதிகரித்தது.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com





