கறுவா, ஏலக்காய் மற்றும் மிளகு ஆகியவற்றின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளன.
தென்மாகாணத்தில் ஒரு கிலோ கிராம் கறுவாப்பட்டை மூவாயிரத்து 900 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ கிராம் விசேட வகை கறுவா ஐயாயிரம் முதல் ஆறாயிரம் ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் செய்கையாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ கிராம் மிளகு ஆயிரத்து 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ கிராம் ஏலக்காய் 2 ஆயிரத்து 300 ரூபா முதல் 2 ஆயிரத்து 400 ரூபாவிற்கு இடைப்பட்ட விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக எமது செய்தித் தொடர்பாளர்கள் தெரிவித்தனர்.
புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com
🛒 இலங்கையில் ஆன்லைன் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய சிறந்த இணையதளம் lankaface.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com





